Home Serial நிகிதா – விஜய் ஜோடியாக நடிக்கும் ‘மல்லி’ SERIAL… புதிய ப்ரோமோவை வெளியிட்ட SUN TV!

நிகிதா – விஜய் ஜோடியாக நடிக்கும் ‘மல்லி’ SERIAL… புதிய ப்ரோமோவை வெளியிட்ட SUN TV!

சன் டிவியில் நிகிதா ராஜேஷ், விஜய் வெங்கடேசன் நடிக்கும் 'மல்லி' என்ற புதிய சீரியல் விரைவில் ஆரம்பமாகப்போகிறது.

by Santhiya Lakshmi


சன் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘அன்பே வா’ சீரியல் இன்னும் சில நாட்களில் நிறைவடையப்போகிறது. இதற்கு பதிலாக ‘மல்லி’ என்ற புதிய சீரியல் ஆரம்பமாகப்போகிறதாம்.

இதில் நிகிதா ராஜேஷ், விஜய் வெங்கடேசன் லீட் ரோல்களில் நடிக்கிறார்கள். மேலும், தனுஸ்ரீ, துஷிதா, அக்ஷயா மோகன் குமார், கிருத்திகா அண்ணாமலை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த சீரியலை இயக்குநர் மணிபாரதி இயக்கிக் கொண்டிருக்கிறார். இதனை ‘சரிகம’ நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது, புதிய ப்ரோமோ வீடியோ சன் டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இதன் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.