விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு மெகா தொடரின் இரண்டாம் பாகம் என்றால் அது ‘Pandian Stores 2’ தான். கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் பாகம் ‘Pandian Stores’ 1000 எபிசோடுகளை கடந்து மாபெரும் வெற்றி அடைந்தது. அதே கதைக்கரு, ஆனால் சற்று வேறுவிதமான சூழ்நிலையில் ஒவ்வொரு வாரமும் கதை களம் நகர்த்தப்படுகிறது. சென்ற சீசனில் இருந்த பாண்டியன், மீனா, ஜீவா/செந்தில் தவிர அனைத்து கதாபாத்திரங்களும் புது விதமாக அமைந்துள்ளது.
சென்ற பாகத்தை விட தற்போது ஒளிபரப்பாகும் இரண்டாம் பாகம் சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தங்களின் ஆதரவை சமூக வலைதள மீம்ஸ், கருத்து பெட்டிகளில் பகிர்ந்து வருகின்றனர்.
Pandian Stores 2 – அடுத்து நிகழப்போவது என்ன?
கடந்த இரு வாரங்களாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரில் சோகம் மற்றும் சுவாரஸ்யம் குறைவாக திரைக்கதை இருந்து வந்தது. அரசியின் சமீபத்திய நடவடிக்கையில் மாற்றம் காணுவதை கோமதி தனது குடும்பத்தினரிடம் கூறினாலும் அதை பெரிதாக யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால், யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பமாக அரசி & குமார் இருவரும் காதலிக்கும் விஷயம் அவளின் முதல் அண்ணன் சரவணனுக்கு தெரிய வருகிறது. அதிர்ச்சியில் அரசி உறைந்து போய் நிர்ப்பது போல் ப்ரோமோ அமைந்துள்ளது.
இதையடுத்து கதைக்களத்தில் இரு குடும்பத்தினரிடையே இருக்கும் பகை மேலும் விரிவடைய வாய்ப்புள்ளது, இருந்தாலும் இதுநாள் வரை தனது தந்தையின் சொல்லே வேதம் என இருந்த மகள் காதலுக்காக முழுவதுமாக மாறி விட வாய்ப்புள்ளது. பாண்டியன் குடும்பத்தில் விழப்போகும் முதல் விரிசல் இந்த காதல் கதையால் தொடங்கும் என அனுமானிக்கின்றனர். கதையில் இனி வரும் சுவாரஸ்யங்களை தெரிந்து கொள்ள விஜய் டிவியில் தொடர்ந்து காணுங்கள் ‘Pandian Stores 2’.
Read More: ‘நீ நான் காதல்’ தொடரில் மீண்டும் இணையும் நடிகை Saai Gayatri
தொடரின் பெயர் | Pandian Stores 2 |
ஒளிபரப்பாகும் டிவி சேனல் | விஜய் டிவி |
நேரம் | இரவு 8 மணி [திங்கள் – சனி ] |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]