பனிவிழும் மலர்வனம் சீரியல் விஜய் டிவியில் ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகிறது. சித்தார்த் குமரனுக்கு ஜோடியாக வினுஷா தேவி கதாநாயகியாக நடிக்கிறார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு இந்த Serial ஒளிபரப்பாகும்.
விஜய் டிவி என்றாலே சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டு தனி ரசிகர் பட்டாளம் விஜய் டிவிக்கு என்று இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 12 முதல் 15 Serial-கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வகையில் பனிவிழும் மலர்வனம் என்ற புது சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலுக்கான ப்ரோமோ விடியோக்களும் வெளியாகியுள்ளது. முதல் ப்ரோமோ வீடியோவில் அண்ணன் தங்கை பாசம் கொண்டு “பாசங்கள் பலவிதம் இவர்கள் பாசம் புது விதம்” என வீடியோ வெளியாகியுள்ளது.
இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கல்லூரியில் படிக்கும் தங்கைக்கு பிறந்த நாள் சர்பிரைஸ் தரும் அண்ணன். மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் தங்கையின் பிறந்த நாளுக்கு கல்லூரியில் பிரியாணி விருந்து வைக்கும் அண்ணன்.
அண்ணன் தங்கை மற்றும் அக்கா தம்பி ஆகியோர் சம்பந்தமான சீரியல் என தெரிய வருகிறது.
சித்தார்த் குமரன் மற்றும் ஷில்பா ஆகியோர் அண்ணன் தங்கையாகவும், வினுஷா தேவி மற்றும் ராயன் அக்கா தம்பியாகவும் நடித்துள்ளனர்.
இந்த Serial திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியிலும் பின்னர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்திலும் ஒளிபரப்பாகவுள்ளது.
மொழி | தமிழ் |
நடிகர்கள் | சித்தார்த் குமரன், ஷில்பா, வினுஷா தேவி, ராயன். |
ஒளிபரப்பு தேதி | — |
Channel Name | Vijay Tv |
OTT Platform | Hot star |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]