தமிழில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தற்போது வரை முதன்மை வகித்து வரும் சன் டிவி, தற்போது புதிதாக “Poongodi” என்ற புதிய மெகாத்தொடர் விரைவில் லான்ச் செய்யப்படவுள்ளது. இந்த தொடரும் கிராமத்து பின்னணி மற்றும் பேமிலி டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளது.
“Poongodi” – பெண்களின் சமத்துவம்
கல்வி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உலகமே பன்மடங்கு பரிணாமம் அடைந்தாலும், உலகில் உள்ள பல கிராமம் மற்றும் நகரங்களில் பெண்கள் ஆணை விட தாழ்ந்தே இருக்க வேண்டும் என்றே மனப்பான்மை கொண்டு ஆண்கள் மற்றும் பெண்களும் உள்ளனர். இவ்வாறு தனது மகன்களை பெரிதாகவும், மகள் poongodi தனது குரலை கூட உயர்த்தி பேசக்கூடாது என்று கூறும் மனநிலை கொண்ட தந்தையின் மனதை தனது அன்பால் மாற்றுவேன் என்று சபதம் புரியும் மகளின் கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
Poongodi – கதாநாயகி யார்?
சன் டிவியில் 2023 ஆம் ஆண்டு லான்ச் ஆன “பூவா தலையா” என்ற மேட்னி தொடரில் ‘இளமதி’ கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை சுவேதா ஸ்ரிம்டன், விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் “Poongodi” தொடரில் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இத்தொடரில், “பசங்க, மெரினா, கும்பாரி” போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து கோலிவுட்டில் தடம் பதித்த நடிகை செந்தி குமாரி, கதாநாயகியின் அம்மாவாக நடித்துள்ளார். பிற கதாபாத்திரங்களின் முழுவிவரமும் விரைவில் வெளியிடப்படும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]