Home Serial SUN TV-யில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் இருந்து விலகிய ஷபானா… இனி ‘அஞ்சலி’யாக நடிக்கப்போவது இவரா?

SUN TV-யில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் இருந்து விலகிய ஷபானா… இனி ‘அஞ்சலி’யாக நடிக்கப்போவது இவரா?

'மிஸ்டர் மனைவி' சீரியலில் 'அஞ்சலி தேவி' என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்த நடிகை ஷபானா, கடந்த வாரம் இதிலிருந்து விலகப்போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.

by Santhiya Lakshmi

பிரபல டிவி சேனலான சன் டிவியில் தினமும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் பாப்புலரான சீரியல்களில் ஒன்று ‘மிஸ்டர் மனைவி’. இந்த சீரியல் கடந்த ஆண்டு (2023) மார்ச் 6-ஆம் தேதி முதல் தற்போது வரை 370 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.  

இதில் ஷபானா, பவன் ரவீந்திரா லீட் ரோல்களில் நடிக்க, இதனை சுலைமான் இயக்கி வருகிறார். ‘அஞ்சலி தேவி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்த நடிகை ஷபானா, கடந்த வாரம் இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்ததாக தண்டோரா போடப்பட்டதுக்கும், மறுப்பு தெரிவித்து பதிவு போட்டிருந்தார். தற்போது, ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் ஷபானாவுக்கு பதிலாக நடிக்க நடிகை தேப்ஜானி மோடக் கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தைப்போல’ சீரியலிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.