2000களின் தொடக்கத்தில் சாட்டிலைட் தொலைக்காட்சி செனல்களின் வருகைக்கு பிறகு பிற மொழி படங்கள், பாடல்கள் பிரபலாமானது. இதோடு ஹிந்தியில் ஒளிபரப்பான பிரபல சிரியல்களும் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்பின. இந்த ஹிந்தி சீரியல்கள் பல தமிழ் மக்களின் தினசரி சீரியல் வரிசையில் ஒரு கட்டாய பாங்காக் அமைந்தது.
உறவே உயிரே (Meri Aashiqui Tum Se hi)

இளம் காதலர்களின் ஒரு அழகான கதையாக ஹிந்தியில் இருந்து டப்பிங் செய்யப்பட்ட சீரியல் தான் ‘உறவே உயிரே’. ஒரு driver-ன் மகன் அவரின் முதலாளியின் மக்களை காதலிக்கும் கதையில் ரவி மற்றும் ஷாலினி பாத்திரத்தை சக்தி அரோரா மற்றும் ராதிகா மதன் நடித்திருப்பர். ஆங்கிலத்தில் எமிலி ப்ரொண்டே எழுதிய பிரபல புதினம் ‘Wuthering Heights’ உடைய கதையின் தழுவலாகவும் ‘உறவே உயிரே’ சீரியல் அமைந்தது. இந்த சீரியலின் டைட்டில் பாடல் அப்போது வெளியான Tum Hi Ho பாடல் என்பதால் இளைஞர்கள் மத்தியில் அதிகம் முணுமுணுக்கப்பட்ட பாடலாகவும் இருந்தது.
உள்ளம் கொள்ளை போகுதடா (Bade Achhe Lagte Hain)

பணக்கார வீட்டில் தற்பெருமை இல்லாத தொழிலதிபர் ராம், ஒரு நடுத்தர வர்கத்து பெண் ப்ரியாவை மணக்க நேர்கிறது. இவர்களின் திருமண வாழ்க்கை எப்படி தொடங்குகிறது, அவர்கள் ருவரும் சந்திக்கும் சிக்கல்கல் என மிக அழகாக அவர்களின் கதையை காட்டிய சீரியல் ‘உள்ளம் கொள்ளை போகுதடா‘. இந்த ஹிந்தி சீரியல் உடைய டைட்டில் பாடலுக்கும் ரசிகர்கள் இன்றுவரை அதிகம்.
மண் வாசனை (Balika Vadhu)

குழந்தை திருமணம் பற்றியும் வடநாட்டில் இப்படியான கல்யாணங்கள் பற்றியும் குறிப்பிட்டு காட்டாமல், அந்த சிறுவர்களின் அறியாமை, மழலை மாறாத கேள்விகள், சமூக கட்டமைப்பை பற்றிய அவர்களின் பார்வையை பேசிய ஹிந்தி டப்பிங் சீரியல்கள் தான் ‘மண் வாசனை’. மிக இயல்பாக, இது போன்ற கதையமைப்பில் சீரியல் கதைகள் இல்லாதவாறு இயக்கியிருந்தார்கள்.
மதுபாலா (Madhubala – Ek Ishq Ek Junoon)

பிரபல சினிமா நடிகரான RK ஒரு விபத்தில் இருந்து தப்பிக்க, அதை தட்டி கேட்கிறார் கதாநாயகி மதுபாலா. இப்படி அமையும் கதியில் அவர்கள் காதலில் விழுந்து கல்யாணம் என பல எபிசோடுகள் ஓடி தமிழ் இளைஞர்களின் மனதை கவர்ந்த ஒரு முக்கியமான ஹிந்தி டப்பிங் சீரியல். தவறாமல் பாலிமர் டிவியில் அனைவரும் 8.00 மணிக்கு பார்க்கும் ஒரு தொடர் தான் ‘மதுபாலா’.
நெஞ்சம் பேசுதே (Na Bole Tum Na Maine Kuch Kaha)

மோகன் மற்றும் மீனாவின் காதல் கதைக்கு ஆதரவு தராதவர்களே இருக்க முடியாது. கணவனை இழந்த பின்னரும் ஒரு வாழ்க்கை அமையும் என்பதை சமூகத்தின் பார்வையிலும், அந்த பெண்ணின் பார்வையிலும் எடுத்து TRP வரிசையிலும் நல்ல சவாலாக இருந்தது இந்த ‘நெஞ்சம் பேசுதே’ ஹிந்தி சீரியல். நகைச்சுவையும் காதலும், குறும்புத்தனமான கதைக்களத்துடன் சேர்ந்து ஒரு புத்துணர்ச்சியான கதையாக அமைந்தது.
சிந்து பைரவி (Uttaran)

பெரும்பாலான வீடுகளில் எல்லா வயது ஆண்கள் பெண்கள் சேர்ந்து பார்த்து ரசித்த ஹிந்தி டப்பிங் சீரியல்கள் பட்டியலில் முதல் இடம் என்றால் அது ‘சிந்து பைரவி’. 1000 எபிசோடுகளுக்கு மேல் ராஜ் டிவியில் பல மாதங்களாக ஒளிபரப்பான சிந்து பைரவி சீரியலில் பெண்களின் நட்பு, விசுவாசம், காதல் என பல கதைக்களன்களை பேசியிருப்பார்கள். இன்றும் இந்த சீரியலுக்கு ரசிகர் கூட்டம் குறையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று முடிச்சு (Sasural Simar Ka)

இதுவரை தமிழில் ஹிந்தி டப்பிங் சீரியல்கள் வரிசையில் ‘மூன்று முடிச்சு’ சீரியலைப்போல பிரபலமான, அதிகம் பார்க்கப்பட்ட, அதிகம் இணையத்தில் கேலி செய்யப்பட்ட சீரியல் என்றால் அது ‘மூன்று முடிச்சு’ தான். அக்கா தங்கை இருவரும் ஒரே வீட்டுக்கு திருமணமாகி செல்ல, இருவரின் சுபமான வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தான் இந்த சீரியலின் கதை. அனால் பாதியிலே இதில் தர்க்கமற்ற, நகைச்சுவையான காட்சிகளும், பார்ப்பவர்களை வியக்கவைக்கும் கேலி சித்திரமாக மாறியது.
உறவுகள் தொடர்கதை (Yeh Rishta Kya Kehlata Hai)

ஹிந்தி சீரியல் ரசிகர்களுக்காகவே முழுக்க முழுக்க எடுக்கப்பட்ட கதையை விஜய் டிவியில் மதியம் 2.30க்கு ஒளிபரப்பி TRP யில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியல் ‘உறவுகள் தொடர்கதை’. அர்ச்சனா மற்றும் கார்த்திக் வீட்டில் பார்த்து கல்யாணம் செய்த ஜோடி. இவர்களின் கல்யாணத்தில் குடும்பத்துடன் அவர்களின் வளர்ச்சி மற்றும் புரிதலை கூறும் சீரியல். இன்னுமும் பல சீசன்களாக ஹிந்தியில் ஒளிபரப்பாகி வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]