Home Serial வார வாரம் திருப்பங்கள், இந்த வாரம் TOP 10 Serial-கள் Promo…

வார வாரம் திருப்பங்கள், இந்த வாரம் TOP 10 Serial-கள் Promo…

ஒரு சில Serial -கள் முடிவுக்கு வர புது சீரியல்கள் வந்த முதல் வாரத்திலேயே TRP ரேட்டிங்கில் அதிகரித்து டாப் 10 லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. 

by Sudhakaran Eswaran

ஒரு சில Serial -கள் முடிவுக்கு வர புது சீரியல்கள் வந்த முதல் வாரத்திலேயே TRP ரேட்டிங்கில் அதிகரித்து டாப் 10 லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. 

Serial -கள் TRP ரேட்டிங் அடிப்படையில் மக்களை சென்றடைகிறது. கடந்த வாரத்தின் தொடர்ச்சியை அந்த வார ப்ரோமோவில் வெளியிட்டு மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்றுள்ள சீரியல்கள். 

Moondru Mudichu serial

கயல் சீரியல்:

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் Serial இந்த வாரத்தில் 8.91 TRP  புள்ளிகள் கொண்டு  முதலிடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கயல், எழிலின் திருமண வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் கயலின் அம்மாவிற்கு தந்த சத்தியத்தை பாதி நிறைவேற்றி விட்டதாகவும், எழிலின் அம்மா மற்றும் தீபிகா ஆகியோர் திருமணத்தை நிறுத்த முயற்சிப்பதாகவும், அதை முறியடித்து தனது திருமணத்தை கயல் நடத்துவரா என பார்க்கலாம். 

சிங்க பெண்ணே:

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த Serial இந்த வாரத்தில் 8.77 TRP கொண்டு  2 -வது இடத்தில உள்ளது.மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள். சொந்த ஊருக்கு சென்றதிலிருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆனந்தி. சுயம்புலிங்கம் தரும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சமாளித்து தனது குடும்பதை காப்பாற்றும் ஆனந்தி. ஆனந்தியை காப்பாற்றிய மகேஷ், அன்பு. ஆனந்தியை காதலிக்கும் மகேஷ். செய்வதறியாது குழம்பி இருக்கும் அன்பு என ப்ரோமோ வெளியானது.  

வானத்தை போல:

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. இந்த வாரம் 8.37 TRP புள்ளியில் 3-வது இடத்தில் உள்ளது. 4 வருடங்களாக ஒளிபரப்பாகும் வானத்தை போல சீரியல் இந்த வாரம் முடிவுக்கு வந்தது. சின்ராசு மற்றும் துளசியின் அண்ணன், தங்கை பாசப்போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 

மூன்று முடிச்சு:

ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திலிருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த Serial நியாஸ் கான், ஸ்வாதி, ப்ரீத்தி சஞ்சீவ், தேனி முருகேசன், பிரபாகரன், கிருத்திகா, காவ்யா பெல்லு போன்றோர் நடித்து வருகின்றனர். ஒளிபரப்பான இரண்டு வாரங்களிலேயே TRP அதிகரித்து உள்ளது. 8.16 TRP ரேட்டிங்கில் 4-வது இடத்தில உள்ளது. அம்மாவிற்கு தொல்லை தரும் மகன் என புது  கதைக்களத்தில் தொடங்கப்பட்ட சீரியல் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகிவருகிறது. 

மருமகள்:

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான மருமகள் இந்த வாரம் 8.02 TRP ரேட்டிங் கொண்டு 5-வது இடத்தில் உள்ளது. அதிரை, பிரபு திருமண ஏற்பாடுகள் குறித்து பிரபு வீட்டில் வந்து பேசும் அதிரை அப்பா. சமையல், திருமண நிகழ்வு குறித்து பேசும் ப்ரோமோ வீடியோ.  

சிறகடிக்க ஆசை:

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 7.95 TRP புள்ளிகள் கொண்டு 6 -வது இடத்தில் உள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ரவி மற்றும் முத்து இருவரும் தனது அம்மாவை சமாளிக்க சண்டைபோடுவது போன்று வாக்குவாதம் செய்யும் படி ப்ரோமோ வெளியானது. 

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் 7.52 TRP புள்ளியில் 7-வது இடத்தில் உள்ளது. திருமணம் செய்து விஜய் வீட்டிற்கு வந்த மல்லியை வீட்டை விட்டு வெளியேற்ற நினைக்கும் வித்யா மற்றும் வெண்பா. இதை சமாளித்து மல்லி விஜய்யுடன் வாழ நினைக்கும் மல்லி என வகையில் ப்ரோமோ வெளியானது. 

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 7.09 TRP புள்ளியில் 8-வது இடத்தில் உள்ளது. உஷா திருமணத்தில் அலமேலுவால் ஏற்படும் பிரச்சனையை சமாளித்து திருமணத்தை நடத்த நினைக்கும் சுந்தரி. சுந்தரிக்கு வரும் பிரச்சனையை அறியாமல் இருக்கும் சுந்தரி என ப்ரோமோ வெளியானது. 

பாக்கியலட்சுமி சீரியல்:

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.13 TRP புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். ராமமூர்த்தியின் கடைசி நிமிடங்கள். உயிர் விட்ட ராமமூர்த்தி. பதறும் பாக்கியா.

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்:

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 5.81 TRP புள்ளிகள் கொண்டு 10-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். நகைகள் அனைத்தையும் வீட்டிற்கு எடுத்துவர சொன்னதும் எடுத்துக்கொண்டு வந்த பிறகு கறுத்துப்போன நகைகள். செய்வதறியாது முழிக்கும் மயில். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.