Home Serial விஜய் டிவியின் Siragadikka Aasai சீரியல் 500 -வது எபிசோடை கடந்து சாதனை. 

விஜய் டிவியின் Siragadikka Aasai சீரியல் 500 -வது எபிசோடை கடந்து சாதனை. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் TRP ரேட்டிங் அதிகம் கொண்டு மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி 500 -வது எபிசோடை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது Siragadikka Aasai சீரியல். 

by Sudhakaran Eswaran

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் TRP ரேட்டிங் அதிகம் கொண்டு மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி 500 -வது எபிசோடை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது Siragadikka Aasai சீரியல். 

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 15 சீரியலுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் நிலையில் ஒவ்வொரு சீரியலும் ஏதேனும் ஒரு வகையில் மக்கள் ரசிக்கும்படியாக இருந்து வருகிறது. சன் டிவிக்கு போட்டியாக TRP ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் ஒரு சில சீரியல்களில் முக்கியமானது Siragadikka Aasai  சீரியல். 

Siragadikka Aasai serial
Source: You Tube

2023 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் Siragadikka Aasai சீரியல் கடந்த ஒன்றரை வருடமாக விஜய் டிவியில் TRP ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியல் 500 – வது எபிசோடை கடந்து ஒளிபரப்பாகி சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக விஜய் டிவி “மக்களுக்கு நன்றி” என்று போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

Siragadikka Aasai
Source: You Tube

கதையின் நாயகனாக வெற்றி வசந்த் முத்துவாகவும், நாயகியாக கோமதி பிரியா மீனவாகவும் நடித்து வருகின்றனர். மேலும் சுந்தராஜன், அனிலா ஸ்ரீகுமார், சல்மா அருண் போன்றோரும் நடித்து வருகின்றனர். 

இந்த சீரியலின் இயக்குனராக S. குமரன் மற்றும் தயாரிப்பாளராக விகடன் டெலிவிஸ்டாஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியும் இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த 9th Annual Vijay Television Awards நிகழ்ச்சியில் சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த மாமனார், சிறந்த மாமியார் சிறந்த பாட்டி, சிறந்த துணை நடிகை என விருதுகளை  குவித்தது. 

கதை பெரும்பாலும் ஒரு சிலரை மட்டுமே மையமாக வைத்து சுவாரசியம் நிறைந்த வகையில் எடுத்து வருகின்றனர். இந்த சீரியலில் ரோகிணி என்ற கேரக்டர் தவறு செய்தலும் எந்த சூழ்நிலையிலும் மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கும் ரோகிணி எப்போது மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கதையை நகர்த்தி வருகின்றனர். 

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.