‘Siragadikka Aasai’யின் இன்றைய எபிசோடில் முத்து கார் ஷெட்டில் நின்று நண்பர்களிடம் பேசி கொண்டிருக்க, அந்த வழியாக வரும் ஜோசியக்காரர் நேராக வந்து முத்துவின் முகத்தைப் பார்த்து ‘மகராசன் கலை தாண்டவமாடுது” எனக் குறி சொல்ல ஆரம்பிக்கிறார். முத்து அவரிடம் பணத்தைக் கொடுத்து ”எனக்கு இதுலலாம் நம்பிக்கை கிடையாது” என்று அவரை அனுப்பப் பார்க்க, நண்பர்கள் ”நீங்க இவன் கையைப் பாருங்க” என்று முத்துவின் கையை தூக்கி ஜோசியரிடம் கொடுக்கின்றனர்.

ஜோசியர் ”இன்னைக்கு உனக்கு பெரிய ஆபத்து இருக்கு. எது செஞ்சாலும் யோசிச்சி செய்யணும்… இல்லனா இந்த ஊரு ஏசும் இடத்துக்கு தள்ளப்படுவ” என்று எச்சரிக்க முத்து ”அவர் ஏதோ சொல்லிட்டு போறாரு என்னைக்கு தான் நமக்கு பிரச்சனை இல்லாம இருந்திருக்கு” என்று அசால்டாக எடுத்துக் கொள்கிறான். பிறகு ஏரியா தலைவர் போன் செய்து முத்துவை உடனே வர சொல்ல இங்க பாரு இப்போ நல்ல சவாரி தான் வந்து இருக்கு என்று சொல்லி முத்து கிளம்பிச்செல்கிறான்.
மறுபக்கம் மீனா உடம்பு சரியில்லாத அம்மாவை பார்க்க வந்திருக்க அப்போது தன் தம்பி சத்யா சிட்டியுடன் வந்து இறங்க மீனா சிட்டியைப் பிடித்து திட்ட சத்யா மீனாவை எதிர்த்து பேச அவரது அம்மா ”என்னடா எவனுக்கோ ஒருத்தனுக்காக அக்காவை எதிர்த்து பேசுற” என்று கோபப்படுகிறார். மீனா சிட்டியை அடிக்க போக சத்யா மீனாவின் கையை பிடித்து தடுக்கிறார். விடு சத்யா அக்கா தானே பேசிட்டு போகட்டும் என்று சிட்டி அங்கிருந்து கிளம்புகிறான்.
மறுபக்கம் முத்துவின் அண்ணன் மனோஜ் ஒரு ஏஜென்சிக்கு வந்து கார் வாங்குவதற்காக தேடிப்பிடித்து ஒரு காரை செலக்ட் செய்து ரோகிணியை அங்கே வர சொல்ல, முத்துவை வரவைத்த தலைவர் தன்னுடைய நண்பரை அறிமுகம் செய்து இவருக்கு ஒரு கார் வேணும், உனக்குத்தான் காரை பத்தி நல்லா தெரியுமே அதனாலதான் வர சொன்னோம் என்று சொல்கிறார்.
முத்து எனக்குத் தெரிந்த ஒரு ஏஜென்சிக்கு நான் கூட கார் அங்க தான் எடுத்தேன் என்று சொல்லி கூட்டி வர எல்லா காரையும் பார்த்த தலைவர் நண்பர் கடைசியாக மனோஜ் செலக்ட் செய்திருக்கிற கார் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். ஏஜென்சி ஓனர் அந்த காரை வேற ஒருத்தர் புக் பண்ணி இருக்காரு என்று சொல்கிறார்.
முத்து ”என்ன சார் இப்படி சொல்றீங்க, அட்வான்ஸ் எதாவது குடுத்து இருக்காங்களா” என்று கேட்க ”இன்னும் எதுவும் கொடுக்கல… காரை செலக்ட் பண்ணியிருக்கவரு உள்ள தான் உக்காந்துட்டு இருக்காரு” என்று சொன்னதும் ”சரி நான் பேசி பார்க்கிறேன்” என்று உள்ளே வந்து பார்க்க அது மனோஜ் ரோகிணி என தெரிய வருகிறது. முத்து மனோஜைப் பார்த்து ஷாக் ஆனவன், ”இவனா அந்த பெரிய தொழிலதிபர்… இவன் வெட்டி பையன், இவனை நம்பி கார் கொடுக்காதீங்க. அவன் ஒழுங்கா பணத்தை கட்ட மாட்டான்” என்று சொல்லி ஓனரின் மனதையும் மாற்றி தலைவரின் நண்பருக்கே விற்க சம்மதிக்க வைக்கிறார். இதனால் ரோகிணி மனோஜ் கோபமாக அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர்.
அதன் பிறகு ஒயின் ஷாப்பில் தலைவரும் அவரது நண்பரும் சரக்கடிக்க முத்து அவர்களுக்கு ஊற்றிக் கொடுக்க அங்கிருந்த சிட்டி இதை வீடியோவாக எடுத்து இன்டர்நெட்டில் பரப்ப பிளான் போடுகிறான். இதனால் முத்துவுக்கு பெரிய சிக்கல் உருவாக உள்ளது. இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]