Home Serial பலித்த ஜோசியர் வாக்கு… ‘Siragadikka Aasai’ இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ்! 

பலித்த ஜோசியர் வாக்கு… ‘Siragadikka Aasai’ இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ்! 

Vijay Tvயில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'Siragadikka Aasai' இன்றைய எபிசோடின்(04-05-2024) ஹைலைட்ஸ் இங்கே.

by Santhiya Lakshmi

விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘Siragadikka Aasai’ இன்றைய எபிசோடின்(04-05-2024) ஹைலைட்ஸ் இங்கே. இன்றைய எபிசோடில் சத்யா முத்து பற்றிய வீடியோவை மீனாவிடம் காட்ட, குடி பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது.

கதாநாயகி மீனாவின் தம்பியான சத்யா முத்து ஒயின்ஷாப்பில் சரக்கை ஊற்றும் வீடியோவைக் காட்டி இப்ப சொல்லு யாரு குடிகாரன் என்று கேள்வி கேட்டு மீனாவை அவமானப்படுத்துகிறார். 

Sirakadika Aasai

உன் புருஷனை ஜெயில்ல போடணும் தூக்குல போடணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க, இப்ப சொல்லு உன் புருஷனைவிட என்னோட ஃப்ரெண்டு சிட்டி எவ்வளவோ மேல்தானே என்று சொல்ல மீனா ஆவேசமாக எழுந்து வெளியே வருகிறாள். 

வீட்டுக்கு வந்த மனோஜ் இந்த வீடியோவை போட்டு காட்டி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறான். ”நான் பார்க்ல சும்மாதான் படுத்துட்டு இருந்தேன்… அதுக்கே என்னலாம் பேசுனீங்க… இப்ப பாருங்க… இவன் குடிச்சிட்டு கார் ஓட்டிட்டு ஊர் முழுக்க அவமானப்பட்டுகிட்டு இருக்கான்” என்று சொல்ல தம்பி ரவி, ”முத்து டியூட்டி டைம்ல அப்படி குடிக்கவே மாட்டான்” என்று சொல்ல மனோஜ் ”அவன் பல நாளா இப்படி குடிச்சிட்டு கார் ஓட்டிட்டு இருக்கானோ என்னவோ… அவனை நாம பக்கத்துல இருந்தா பார்த்தோம்” என்று சொல்கிறான். ரோகிணி ”மனோஜ் பண்ண சின்ன சின்ன தப்பு எல்லாம் பெரிய பிரச்சனையாக்கி முத்து இவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்காரு, இப்போ என்ன சொல்ல போறீங்க” என்று அண்ணாமலையை பார்த்து கேள்வி கேட்கிறாள்.

விஜயா ”என்ன வேலை பண்ணிட்டு இருக்கான் பாருங்க சொந்தக்காரங்க எல்லாம் நாக்கு பிடுங்கிக்கிற மாதிரி மாதிரி கேள்வி கேப்பாங்க. வெளியவே தலை காட்ட முடியாது. சம்பந்தி வீட்டுக்காரர்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சா என்ன ஆகும்” என்று கோபப்பட்டுக் கொண்டிருக்க ஸ்ருதியின் அப்பா போன் பண்ண ”ஐயோ அவருக்கு வேற தெரிஞ்சிடுச்சா” என்று பதறுகிறார். 

மறுபக்கம் முத்து கஸ்டமரை ஏற்றிக்கொண்டு கார் ஓட்டிக்கொண்டு செல்ல அப்போது முத்துவின் வீடியோவை பார்த்து அவர்கள் காரை ஓரங்கட்ட சொல்லி இறங்கி ”இனிமே உன் கார்ல வர முடியாது” என்று பணத்தை கொடுத்து செல்ல முத்து புரியாமல் நிற்கிறான். இப்படியே ஒவ்வொரு சவாரியாக கிடைக்க அது கேன்சல் ஆகிவிடுகிறது.

இன்னொரு பக்கம் வாசுதேவன் கமிஷனருக்கு போன் போட்டு இந்த வீடியோ பற்றி பேசி இதெல்லாம் நீங்க தடுத்து நிறுத்தணும் இல்லனா பெரிய விபத்து ஏற்படும் என்று சொல்லி ஃபோனை வைக்க கமிஷனர் வண்டியை சீஸ் செய்து லைசென்ஸ் பிளாக் செய்ய சொல்லி உத்தரவிடுகிறார். அதன் பிறகு முத்து காரில் வந்து கொண்டிருக்க அவனை வழி மறிக்கும் போலீஸ் லைசென்ஸ் பிடுங்கி கொண்டு காரையும் எடுத்துச் செல்ல முத்து ”நான் குடிக்கல” என்று சொல்லியும் காரை எடுத்துக்கொண்டு செல்ல முத்து நடு ரோட்டில் நிற்கிறான். இப்படியாக இன்றைய எபிசோட் முடிகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.