விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நம்பர் 1 சீரியல் ‘Siragadikka Aasai‘. இந்த சீரியலின் இன்றைய(06-05-2024) எபிசோட் ஹைலைட்ஸ் இங்கே!
முத்து குறித்து வந்த குடி வீடியோவால் அப்பா அண்ணாமலை உடைந்து போய் உட்கார்ந்து இருக்க மீனாவிடம் மாமியார் விஜயா ”உன் புருஷன் பண்ண வேலையால இந்த குடும்பமே தலை குனிஞ்சி நிக்குது. இப்போ உனக்கு குளு குளுன்னு இருக்குமே… இனிமே உன்னை 500 மாலை கட்டிய முத்துவின் மனைவி மீனான்னு சொல்ல மாட்டாங்க… குடிகாரன் பொண்டாட்டின்னு தான் சொல்லுவாங்க” என்று சொல்ல மீனா ”உங்களையும் குடிகாரன் அம்மானுதானே சொல்லுவாங்க” என்று பதிலடி கொடுக்கிறாள்.

”எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம்தான் ஆச்சு. ஆனா பொறந்ததிலிருந்து நீங்க தானே அவர வளர்த்தீங்க. ஏன் நீங்க நல்ல புத்தி சொல்லி வளர்க்க வேண்டியது தானே” என்று மீனா அடுத்தடுத்த கேள்விகள் கேட்க அதிர்ந்து போகிறார் விஜயா. உடனே விஜயா நான் வளர்த்த மனோஜும், ரவியும் நல்லாதான் இருக்காங்க… இங்க இருக்காரே இவரோட அம்மாதான் முத்துவை வளர்த்தாங்க” என அண்ணாமலையைப் பார்த்து விஜயா சொல்ல, அண்ணாமலை ”போதும் நிறுத்து… உன் வாய் தான் எல்லாத்துக்கும் காரணம்” என திட்டுகிறார். ”அவன் பண்ண தப்புக்கு மீனாவை எதுக்கு பேசுற” என்று கேள்வி கேட்கிறார். பிறகு ஸ்ருதியின் அம்மா போன் பண்ணி விஜயாவிடம் முத்து பற்றி பேச ஸ்ருதி போனை வாங்கி திட்டி போனை வைக்கிறார்.

அதன் பிறகு முத்து வீட்டுக்கு வந்து காரை தூக்கிட்டு போயிட்டாங்கபா என்று சொல்ல விஜயா குடிச்சிட்டு வண்டியை ஓட்டினா தூக்கிட்டு தான் போவாங்க என்று சொல்கிறாள். அண்ணாமலை ”உன்னால இந்த குடும்ப மானமே போச்சு” என்று ஆவேச பட மனோஜ் ”நீ பண்ண வேலைதான் ஊரே பார்த்து சிரிக்குது” என்று சொல்ல ”நான் குடிக்கலடா சொன்னா நம்பு” என்று அடிக்க பாய அண்ணாமலை ”குடிச்சதும் இல்லாம ரவுடித்தனமா பண்ற” என்று அடிக்க கை ஓங்க விஜயா ”இதை ஆரம்பத்துலயே பண்ணியிருந்தீங்கன்னா இவன் ஒழுங்கா இருந்து இருப்பான்” என்று சொல்ல முத்து ”அடிப்பா” என்று சொல்கிறான்.
பிறகு முத்து மீனாவின் கையை பிடித்துக் கொண்டு ”சத்தியமா நான் குடிக்கல மீனா” என்று சொல்ல மீனாவும் அதை நம்ப மறுக்க நான் குடிக்கல என்று நடந்து காட்ட மனோஜ் குடிச்சிட்டு நடந்துகிட்டு இருக்கான் என்று சொல்கிறார். ரவி ஸ்மெல் வரல என்று சொல்ல ஸ்மெல் வராமல் இருக்க ஏதாவது சாப்பிட்டு இருப்பான் என்று மனோஜ் சொல்கிறான்.
அண்ணாமலை ” இந்த வீட்ல நிம்மதியே இல்லாம போச்சு… என்னமோ பண்ணுங்க” என்று வெளியே சென்று விடுகிறார். ரோகிணி ”நாங்க செலக்ட் பண்ணியிருந்த காரை இன்னொருத்தருக்கு கை மாத்தி விட்டு வாங்கிய கமிஷன்லதானே குடிச்சீங்க? இனிமே எங்க விஷயத்துல தலையிடாதீங்க” என்று சொல்லி உள்ளே செல்கிறாள். யாருமே முத்துவை நம்பாமல் இருக்க முத்து கலங்கி நிற்கிறான்.
அதைத் தொடர்ந்து விஜயா மீனாவையும் முத்துவையும் பார்த்து ”ரெண்டு பேரும் நீங்களா வெளிய போயிடுங்க” என்று சொல்லிவிட்டு செல்கிறாள். மீனா கிச்சனுக்குள் சென்றுவிட பின்னாடியே சென்ற முத்து அவரிடம் பேச மீனா முத்துவை புரிந்து கொள்ளாமல் பேசுகிறாள். இப்படியாக இன்றைய ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]