விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘Siragadikka Aasai’. இந்த சீரியலின் இன்றைய (07-05-2024) எபிசோட் ஹைலைட்ஸ்!
முத்து மீனாவிடம் சத்தியமா நான் குடிக்கல என்று சொல்ல மீனா அதை நம்ப மறுக்கிறார். ”உங்களை எல்லாம் திருத்த முடியாது… நல்ல வேலை இதை எல்லாம் பார்க்க என் அப்பா இல்லை.. எல்லாம் என் தலையெழுத்து” என்று சொல்லி கண்கலங்க முத்து ”அப்போ நீயும் என்னை நம்பலல இல்ல” என்று கோபப்பட்டு வெளியே வருகிறான்.

அதன் பிறகு பூ கொடுக்க வந்த மீனாவை சந்தித்த சிட்டி முத்துவின் நிலைமை பற்றி பேசி பரிதாபப்படுவது போல மீனாவை கிண்டல் அடிக்கிறான். போய் உன் புருஷனுக்கு நல்ல புத்திமதி சொல்லுக்கா என்று சொல்லி கிளம்பி செல்கிறான்.
அடுத்ததாக முத்து செல்வம் மற்றும் நண்பர்களிடம் ”நான் சத்தியமா குடிக்கலடா… நீங்களாவது நம்புங்க” என்று சொல்ல ”உன்னை பற்றி எங்களுக்கு தெரியாதாப்பா” என்று நண்பர்கள் சொல்கிறனர். ”என் அப்பா கூட என்னை நம்பல… என்ன அடிக்க கை ஓங்கிட்டாரு. அவர் பார்த்த பார்வை இருக்கே… உன்னை எல்லாம் புள்ளையா பெத்தேன் பாரு என்று சொல்ற மாதிரியே இருந்தது” என்று கவலைப்படுகிறான் முத்து. ”சரி விடுப்பா… நாளைக்கு போய் போலீஸ் ஸ்டேஷன்ல கார் எடுக்கிற வழிய பாரு” என்று சொல்கின்றனர்.
அடுத்ததாக மீனா பூ கொடுக்க வர அப்போது மீனாவுக்கு தெரிந்தவர்கள் ”என்ன முத்து இப்படி பண்ணிடுச்சு… முத்துவை திருத்த ஏதாவது முயற்சி பண்ண வேண்டியதுதானே” என்று சொல்கின்றனர். மீனா ”நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன்” என்று சொன்னதும் பூக்கட்டும் பெண்மணி ஒருவர் ”என் புருஷன் கூட இப்படித்தான் குடிச்சிகிட்டு இருந்தாரு. வீட்டு பக்கத்துல இருக்க ஒரு வைத்தியர் நாட்டு மருந்து ஒன்னு கொடுத்தாரு. அதைக் குடுத்தேன்… இப்ப குடியை விட்டுட்டு ஒழுங்கா வேலைக்கு போறாரு” என்று சொல்ல மீனா அந்த மருந்தை வாங்கி கொடுங்க என்று சொல்லி கூட்டி செல்கிறார்.
விஜயா கேட்ட கேள்வி, மீனா கொடுத்த பதிலடி… ‘Siragadikka Aasai’ இன்றைய எபிசோட்!
அதன் பிறகு வீட்டுக்கு வந்த மீனா ஆரஞ்சு ஜூஸ் போட்டு அதில் யாருக்கும் தெரியாமல் மருந்தை கலக்கி வைக்க அண்ணாமலை போன் பண்ணி கீழே கூப்பிட மீனாவும் கீழே இறங்கி செல்ல அந்த நேரத்தில் விஜயா கிச்சனுக்குள் வந்து ஜூசை குடுத்து விடுகிறார். அண்ணாமலை என்னுடைய யூனியன் ஆபீஸ்ல வேலை பண்றவங்களோட பொண்ணுக்கு கல்யாணம் அதனால 50 முழம் பூவும் ரெண்டு மாலையும் ஆர்டர் கொடுத்து இருக்காரு. முன்பணம் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறார் என்று சொல்லி எடுத்து கொடுக்கிறார். முத்து சொன்ன மாதிரி இந்த பூக்கடை பூக்கடலாக மாறும் என்று வாழ்த்துகிறார். வெளியிலிருந்து முத்துவும் இதை கேட்கிறான்.

மேலே வந்த முத்து மீனாவிடம் ”அப்பா என்ன சொன்னாரு” என்று கேட்க ”தேவையில்லாததை குடிக்காம ஜூஸ் போட்டு குடிக்க சொல்லு” என்று ஆரஞ்சு பழத்தை வாங்கி வந்து கொடுத்தார் என்று சொல்லி ஜூஸை எடுத்து வர போக அதை விஜயா குடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் மீனா.
அத்தைக்கு ஏதாவது ஆகிடுமோ என்று பயப்படுகிறாள். மருந்து வாங்கி கொடுத்த அக்காவுக்கு போன் பண்ண அவர் போனை எடுக்காத நிலையில் வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பி போகிறாள்.
வழியில் செல்வத்தை பார்க்க மீனா அவனிடம் ”நீங்களாவது அவருக்கு அட்வைஸ் பண்ண கூடாதா” என்று கேட்க, செல்வம் ”முத்து குடிக்கவே இல்ல” என்று சொல்லி முத்து பேசியதைப் பற்றி சொல்கிறான்.
இங்கே பார்வதி வீட்டுக்கு வர விஜயா அவருடன் பேசிக்கொண்டே இருக்கும் போது வயிறு எரியுது என்று பாத்ரூமுக்கு ஓடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]