Home Serial முத்துவுக்காக பாருக்கு வந்த மீனா, சிக்கிய சிட்டி… ‘Siragadikka Aasai’ இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ்!

முத்துவுக்காக பாருக்கு வந்த மீனா, சிக்கிய சிட்டி… ‘Siragadikka Aasai’ இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ்!

Vikay Tv யில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'Siragadikka Aasai'. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்(09-05-2024) ஹைலைட்ஸ் இங்கே!

by Santhiya Lakshmi

விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘Siragadikka Aasai’. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்(09-05-2024) ஹைலைட்ஸ் இங்கே!

Siragadikka Aasai Todays episode

போலீஸ் ஸ்டேஷனில் முத்து இன்ஸ்பெக்டரிடம் ”சார் நான் குடிக்கவே இல்லை” என்று சொல்லியும் இன்ஸ்பெக்டர் நம்பாமல் ”எதுவா இருந்தாலும் கோர்ட்ல பாத்துக்க” என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

அதைத்தொடர்ந்து மீனா ஆதாரத்தை திரட்டுவதற்காக ஒயின்ஷாப் வருகிறார். ஒயின் ஷாப்பில் மீனா காத்திருக்க அந்த வழியாக வந்த யூடியூபர் ஒருவர் செம கன்டென்ட் கிடைச்சிருக்கு என்று லைவ் வீடியோவில் ”இந்திய குடிமகன்களுக்கு முன்பாகவே வந்து ஒயின் ஷாப்ல காத்துக்கிட்டு இருக்காங்க ஒரு பெண்” என்று சொல்லி மீனாவை வீடியோ எடுப்பதோடு ”எவ்வளவு நாளா உங்களுக்கு இந்த குடிப்பழக்கம் இருக்கு” என கேள்வி கேட்க மீனா இதெல்லாம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கா என்று கேட்க அவரும் ஆமாம் என சொல்கிறார். அதன் பிறகு சரி கொஞ்சம் கிட்ட வாங்க என்று கூப்பிட்டு கன்னத்தில் பளாரனே அறைகிறார்.

Siragadikka Aasai Todays episode

”உங்களை மாதிரி ஆளுங்க இந்த மாதிரி வீடியோ எடுத்து போட்டதுனால தான் இன்னைக்கு என் புருஷன் பிரச்சனையில் மாட்டி இருக்காரு… அவர் தப்பு பண்ணலனு நிரூபிக்கத்தான் நான் இங்க வந்து இருக்கேன்” என்று சொல்லிவிட்டு கெத்தாகப்போகிறாள் மீனா.

ஒயின்ஷாப் பார் உள்ளே சென்று ஓனரை சந்திக்கும் மீனா, நடந்த விஷயத்தை சொல்லி என் புருஷன் தப்பு பண்ணலன்னு நிரூபிக்கணும் அதுக்கு உதவுங்க என்று கேட்க அவர் அதெல்லாம் பண்ண முடியாது எனச் சொல்ல உங்க பொண்ணா நினைச்சு கேட்கிறேன் என்று வேண்டுகிறார். பிறகு மீனாவுக்கு சிசிடிவி ஆதாரங்களை காட்ட இந்த வேலையை பார்த்தது யார் என்பது தெரிய வருகிறது. 

உடனே மீனா இந்த வீடியோவை ரவிக்கு அனுப்ப சொல்லி நம்பர் கொடுத்துவிட்டு ரவியை முத்துவின் கார் ஷெட்டுக்கு வரச் சொல்லி மீனாவும் கிளம்பி செல்கிறார். இங்கே வந்த மீனா முத்துவை ஓடி வந்து கட்டிப்பிடித்து என்னை மன்னிச்சிடுங்க… நீங்க அவ்வளவு சொல்லியும் நானும் உங்களை நம்பாமல் விட்டுட்டேன். நானாவது உங்களை நம்பி இருக்கணும் என அழுது புலம்ப முத்து என்ன மீனா என்று கேட்டு ரவி அண்ணி பாருக்கு போய் நீ குடிக்கலன்னு வீடியோ ஆதாரத்தோட நிரூபிச்சிருக்காங்க என்று சொல்கிறார். 

Siragadikka Aasai Todays episode

முத்துவிடம் இந்த வீடியோவையும் போட்டு காட்டி பிறகு முத்துவையே பேசவைத்து வீடியோவாக எடுத்து அதையும் இணைத்து இன்டர்நெட்டில் விடுகின்றனர். முத்து நான் குடிக்கல என் மேல சுமத்தப்பட்ட பழியிலிருந்து என்னை வெளியே கொண்டு வந்தது என் பொண்டாட்டி மீனா தான். தயவுசெய்து ஒரு வீடியோ வந்தால் அது உண்மையா பொய்யான்னு தெரியாம அப்படியே நம்பி எல்லாருக்கும் அனுப்பாதீங்க என்று வேண்டுகோள் விடுக்கிறான்.

Siragadikka Aasai Todays episode

இந்த வீடியோவை பார்த்து மீனாவின் அம்மாவும் கண்கலங்க மறுபக்கம் அண்ணாமலைக்கும் விஷயம் தெரிந்து அவரும் வீடியோவை பார்த்து கண் கலங்குகிறார். இப்படியாக இன்றைய ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் எபிசோட் முடிகிறது. ‌

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.