தமிழ் சின்னத்திரையின் நம்பர் ஒன் சீரியலாக விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது Siragadikka Aasai. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ் இங்கே!
ரோகினி மற்றும் மனோஜ் என இருவரும் புதிய கார் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். மனோஜ் ”நேத்து அவங்களுக்கு மட்டும் ஆரத்தி எடுத்தாங்க இன்னைக்கு நமக்கு எடுக்கட்டும்” என அம்மாவுக்கு போன் போட்டு ”நீங்க ஆரத்தி கரைச்சி கொண்டு வாங்க… நாங்க புதுசா கார் வாங்கிட்டு வந்திருக்கோம்” என்று சொன்னதும் விஜயா சந்தோஷப்பட்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு கீழே வந்து ஆரத்தி எடுக்கிறார்.

முத்து மனோஜிடம் ”இப்போ உனக்கு எதுக்கு கார்?” என்று கேட்க ”நான் வாங்குனா உனக்கு என்னடா” என்று மனோஜ் கோபப்படுகிறார். அதன்பிறகு அண்ணாமலையும் ”உனக்கு எதுக்கு கார்?” என்று கேட்க ”அப்பா புதுசா பிசினஸ் ஆரம்பிக்கப்போறேன். நிறைய இடத்துக்குப் போகணும், வரணும். பிசினஸ் விஷயமா ஆட்டோலயும் பஸ்லயும் போக முடியாது. அதனாலதான் வாங்கினேன்” என்று சொல்கிறான் மனோஜ். முத்து காரை சுற்றிப் பார்த்துவிட்டு ”இதுக்கு நாலு லட்சம் ஜாஸ்தி… இரண்டரை லட்சம் கொடுத்திருக்கலாம். நல்லா ஏமாந்துட்டு வந்து இருக்கான்” என்று சொல்கிறான்.
ரவி ”என்ன பிசினஸ் பண்ணப் போறே?” என்று மனோஜிடம் கேட்க அதை பத்தி இதுக்கு அப்புறம் தான் யோசிக்கணும் என்று சொல்கிறான் மனோஜ். மீனா ”அவரை(முத்து) கூட்டிட்டு போய் வாங்கி இருக்கலாம் இல்ல… அவருக்கு கார புத்தி நல்லா தெரியுமே” என்று கேட்க ”அவர் என்ன மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கா படிச்சிருக்காரு” என்று ரோகிணி நக்கலாக பேச ”அவர் அதெல்லாம் படிக்கல… ஆனா காரை நல்லா படிச்சிருக்காரு” என்று பதிலடி கொடுக்கிறால் மீனா.
அடுத்ததாக ரவி மனோஜிடம் ட்ரீட் கேட்கிறான். முதலில் முடியாது என சொல்லும் மனோஜ் பிறகு ஆளுக்கு ஒரு பீர் தான் வாங்கித் தருவேன் என்று சொல்கிறான். அடுத்த சீனில் முத்து மற்றும் ரவி மொட்டை மாடியில் காத்திருக்க மனோஜ் பீர் வாங்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு வர ”எவ்வளவு பயமா இருந்துச்சு தெரியுமா” என்று சொல்கிறான். ஏன் அண்ணிகிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கலையா என்று கேட்க ஒரு பீர் குடிக்க தான் பர்மிஷன் கொடுத்திருக்கா என்று சொல்கிறான். ரவியும் எனக்கும் ஒரு பீர் குடிக்க தான் பர்மிஷன் என்று சொல்கிறான்.
பிறகு இருவரும் குடிக்க உட்கார முத்துவையும் கூப்பிட முத்து எனக்கு வேண்டாம் குடிக்கிற ஐடியா இல்ல நீங்க குடிங்க என்று சொல்ல மனோஜ் சொல்லியிருந்தா ரெண்டு பீர் மட்டும் வாங்கி இருப்பேன்ல என்று சொல்லிவிட்டு ரவி ”சரி விடுடா நம்ப குடிக்கலாம்” என்கிறான்.
கீழே மீனா ரோகினி மற்றும் ஸ்ருதி ஆகியோர் டீ போட்டு குடித்துக்கொண்டிருக்கின்றனர். மேலே ரவி ”என்ன பிசினஸ் ஆரம்பிக்க போற” என்று கேட்டு ”ஹோட்டல் பிசினஸ் ஆரம்பிச்சிடு” என்று ஐடியா கொடுக்கிறான். ”எதுக்கு நீ செஃப் ஆகுறதுக்கா” என்று சொல்லும் மனோஜ் அடுத்தவன் நாக்கெல்லாம் நம்பி இன்வெஸ்ட் பண்ண முடியாது என சொல்கிறான். உடனே ‘’அப்படின்னா நாலு கார் வாங்கி வாடகைக்கு விடு’’ என்று முத்து சொல்ல ‘’அடுத்தவன் சொகுசா வாழ நான் கார் வாங்கி விடணுமா? அதெல்லாம் முடியாது’’ என்று சொல்கிறான். இவர்கள் கொடுக்கும் எல்லா ஐடியாவுக்கும் நோ சொல்கிறான் மனோஜ். உட்கார்ந்து இடத்திலிருந்து நிறைய பணம் வரணும் என்று மனோஜ் சொல்ல அதுக்கு நீ கோவில் வாசல்ல தான் உட்காரணும் என்று முத்து கலாய்க்கிறான். அங்க மட்டும் தான் நீ எங்கேயும் போகாம உக்காந்தா காசு தருவாங்க என்று பிச்சை எடுக்க சொல்ல ரவி சிரிக்கிறான்.
அதேபோல் ரோகிணி பிசினஸ்க்கு ஐடியா கேட்க மீனாவும் ஸ்ருதியும் ஆளுக்கு ஒரு ஐடியா சொல்ல மனோஜ் போலவே இவரும் எல்லாவற்றுக்கும் நோ சொல்கிறாள். ”சரி உங்க ஹஸ்பண்டுக்கு என்ன ஸ்கில் இருக்கு?” என்று ஸ்ருதி கேட்க ரோகினி ”மணி மேனேஜ்மென்ட் நல்லா பண்ணுவாரு” என சொல்கிறாள். உடனே ஸ்ருதி ”அங்கிளோட ரிட்டயர்மென்ட் பணத்தை எடுத்துட்டு போனாரே அந்த மாதிரியா” என்று கிண்டல் அடிக்க மீனா சிரித்து விடுகிறார்.
அடுத்ததாக ரோகிணி மேல ஏதாச்சு டிஸ்கஸ் பண்ணுவாங்க என்று சொல்ல சுருதி அவங்க குடிக்க போயிருக்காங்க என்று சொல்கிறார். ரோகினியும் ஸ்ருதியும் ஒரு பீர் குடிக்க தான் பர்மிஷன் கொடுத்திருக்கேன் என்று சொல்கின்றனர். ரோகிணி ஆனால் முத்துவுக்கு அளவே கிடையாது நல்லா குடிச்சிட்டு வர போறாரு பாருங்க என்று சொல்ல மீனா அவர் குடிக்க மாட்டாரு என்று சொல்கிறாள்.
”சும்மா சொல்லாதீங்க மீனா… அவர் தள்ளாடிட்டு தான் வருவாரு” என்று ரோகினி நக்கலடிக்கிறாள். பிறகு ஸ்ருதி ரவிக்கு போன் போட்டு கீழ வர சொல்ல ரோகிணி மனோஜ்க்கு போன் போட்டு எவ்வளவு நேரம் சீக்கிரம் வா என்று சொல்ல மனோஜ் போதையில் தள்ளாடி படிக்கட்டு என நினைத்து மாடியில் இருந்து குதிக்க பாக்க முத்துவும் ரவியும் அவரை பிடித்து கீழே கூட்டி வருகின்றனர்.
முதலில் வரும் முத்துவை பார்த்த ரோகினி நான்தான் சொன்னேன்ல என்று மீனாவை கலாய்க்க அடுத்து வரும் மனோஜை பார்த்த சுருதி ”அவங்க உங்க வீட்டுக்காரரத்தான் தூக்கிட்டு வராங்க” என்று சொன்னதும் பல்பு வாங்குகிறார். போதையில் வந்து ரோகிணியிடம் மனோஜ் கலாட்டா செய்ய ஒரு அடி கொடுத்து ரூமுக்கு இழுத்து செல்கிறாள் ரோகிணி.
ஸ்ருதி ரவியை கூட்டிச் சென்றதும் நீங்க எவ்வளவு குடிச்சீங்க என்று மீனா முத்துவிடம் கேட்க நான் குடிக்கவே இல்ல என்று முத்து சொல்ல மீனா பொய் சொல்லாதீங்க உண்மைய சொல்லுங்க என்று மிரட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]