சில நாட்களுக்கு முன் சன் Tv-யின் முன்னணி மெகா சீரியலான “சுந்தரி” விரைவில் முடிவுக்கு வரவுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில், அதற்கு மாற்றாக என்ன சீரியல் வரப்போகிறது, யார் நடிக்கப்போகிறார் போன்ற கேள்விகள் டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக இரண்டு brand new சீரியல்களின் ப்ரோமோக்களை வெளியிட்டது சன் Tv.
ஆடுகளம்
செல்வாக்கான பெரிய குடும்பமாக “மணியரசு” குடும்பம் விளங்கிவருகிறது. இந்த குடும்பத்தில் பிறந்தவள் தான் கதாநாயகி ‘சத்யா’. இதில் மணியரசு என்ற கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் நடித்துள்ளார், மற்றும் சத்யாவாக நடிகை டெல்னா டேவிஸ் நடித்துள்ளார்.
டெல்னா டேவிஸ் இதற்கு முன் சன் Tv-யில் ஒளிபரப்பான “அன்பே வா” என்ற மெகா சீரியலில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் பழம்பெரும் நடிகை சச்சு, நடிகர் ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சீரியலின் தலைப்பிற்கு ஏற்ப “ஆடுகளம்” சீரியலின் ப்ரோமோ அமைந்துள்ளது. கபடியில் மணியரசு குடும்பத்தின் மானத்தை காப்பாற்ற தைரியமாக களத்தில் இறங்குகிறாள் அந்த குடும்பத்தை சேர்ந்த சத்யா. அதோடு அந்த போட்டியையும் வென்று விடுகிறாள்.
“விளையாட்டில் மட்டும் அல்ல தனது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளையும் துணிந்து நின்று போராடுவேன்” என்று ப்ரோமோவின் இறுதியில் கூறுகிறாள், சத்யா. இறுதிக் காட்சியில் இடம் பெரும் இந்த வசனத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தின் ஆழத்தை நம்மால் காண முடிகிறது.
அன்னம்
சொந்த வீட்டிலேயே மோசமாக நடத்தப்படும் “அன்னலட்சுமி” ஆக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகிறார் ‘அயலி’ வெப் சீரிஸின் நாயகி அபி நக்ஷத்ரா. இவர் “மூக்குத்தி அம்மன், நெஞ்சுக்கு நீதி” போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
“அன்னம்” என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. மாமா அத்தையின் மேற்பார்வையில், தனது சொந்த வீட்டில் எந்த ஒரு சுதந்திரமும் இன்றி ஒரு பணிப்பெண் போன்று வாழ்ந்து வருகிறாள். ஆனால், வீட்டிற்கு வெளியே துணிகளை விற்று அதில் வரும் பணத்தை கொண்டு தனக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் ஒரு சுதந்திரமான பெண்ணாக வலம் வருகிறாள். ஊரில் இருக்கும் அனைவரையும் தனது சொந்தமாக எண்ணி அனைவரிடமும் தனது அன்பை பகிர்ந்து வருகிறாள். இருப்பினும், அவளுக்காக யோசிக்க யாரும் இல்லாத காரணத்தால் ஒரு புது உறவை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறாள் அன்னம்.
“ஆடுகளம்”, “அன்னம்” என இரு சீரியலும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதனால், சன் Tv-யில் ஏற்கனவே ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மற்ற சீரியல்கள் போல், புதிதாக வரவிருக்கும் இந்த இரு சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. “ஆடுகளம்” மற்றும் “அன்னம்” சீரியல்களின் வெளியீட்டுத் தேதி, ஒளிபரப்பாகும் நேரம் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com