Home Serial மீண்டும் Metti Oli… கோபி IS BACK!

மீண்டும் Metti Oli… கோபி IS BACK!

Metti Oli Serial இந்த மாதம் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதவாக்கில் ‘மெட்டி ஒலி-2’ தொடரை ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறது சன் டிவி.

by Santhiya Lakshmi

சன் டிவியில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான மெகா தொடர் ‘Metti Oli’. தமிழ்த்தொலைக்காட்சிகளில் மிகவும் வெற்றிகரமான தொடரான ‘மெட்டி ஒலி’ கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சன் டிவியில் ஒளிபரப்பானது. ஒரு வயதான அப்பா அவரது ஐந்து மகள்கள், மருமகன்கள் என்கிற கதைக்களத்தைக்கொண்டு ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி‘ சீரியலுக்கு இன்றுவரை ரசிகர்கள் இருகிறார்கள்.

Sun-TV-Metti-Oli-Serial

சீரியல் இயக்குநரான திருமுருகன் இந்ததொடரில் கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் நடிகராகவும் புகழ்பெற்றார். இந்ததொடரில் போஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் போஸ் வெங்கட் என்கிற அடைமொழியே வெங்கட் என்கிற நடிகருக்கு வந்தது.

‘’அம்மி அம்மி அம்மி மிதித்து… அருந்ததி முகம் பார்த்து’’ என ஆரம்பிக்கும் இந்ததொடரின் டைட்டில் பாடலுக்கு இன்றுவரை ரசிகர்கள் உண்டு. அதனால் இந்ததொடரின் சீசன் 2-வாக ‘மெட்டி ஒலி-2′ தொடரை மீண்டும் தொடங்குகிறது சன் டிவி. கோபி கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர் திருமுருகன் இந்த முறை நடிகராக மட்டுமே நடிக்க இருக்கிறார். தொடரின் இயக்குநராக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

மெட்டி ஒலி பார்ட் 1-ல் நடித்த பல நடிகர், நடிகைகளிடமும் பேசப்பட்டு வருகிறது. இந்த மாதம் ஷூட்டிங் தொடங்க  இருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதவாக்கில் ‘மெட்டி ஒலி-2’ தொடரை ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறது சன் டிவி.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.