முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான Sun Tv-யில் மேட்னி மற்றும் ப்ரைம் டைம் என மொத்தம் பதினைந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிக பார்வையாளர்களையும் மற்றும் TRP ரேட்டிங்கிலும் விஜய் டிவி, ஜீ தமிழை பின்னுக்கு தள்ளி Sun Tv முன்னணி வகித்து வருகிறது. இதில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் ஐந்து சீரியல் TRP ரேட்டிங்கில் மாஸ் காட்டி வருகிறது என்று ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது. அவை “கயல், மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, சுந்தரி, மற்றும் மருமகள்”.
வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த சீரியல்களில் ஆயிரம் எபிசோடுகளை கடந்த “சுந்தரி” சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
சுந்தரி : ஒரு சராசரி பெண்ணின் போராட்டம்
2021 ஆம் ஆண்டு பல டிவி சீரியல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “சுந்தரி” மெகா தொடர் Sun Tvயில் ஒளிபரப்பானது. கருமையான நிறம் கொண்ட பெண்ணை சமூகத்தில் எதிர்க்கொள்ளும் இன்னல்கள், அவளின் குடும்பத்தில் இருக்கும் பல பேர் இகழ்ச்சியாக பேசுவது போன்ற சூழ்நிலைகள் காண்பிக்கப்பட்டிருக்கும். சுந்தரியின் மிகப்பெரிய பலமாக அவளின் பாட்டி காந்திமதி கதாபாத்திரம் இருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்தது என்றே கூறலாம். IAS ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் தொடங்கும் சுந்தரியின் பயணம், எதிர்பாரா சூழ்நிலையால் பெண்களை வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடும் கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ளும் சூழல் உருவாகிறது.
அதன் பின்னே தனக்கு பிடித்த பெண்ணான அனுப்ரியா என்னும் அணுவை திருமணம் செய்து கொண்டு சுந்தரியை கை விடுகிறான் கார்த்திக். அணுவின் மகிழ்ச்சியான வாழ்க்கை கார்த்திக்கின் ஆணாதிக்க செயல்களால் கொடுமையானதாக மாறுகிறது. முதல் சீசன் இறுதியில் அணு தனது பெண் குழந்தை தமிழை சுந்தரியிடம் ஒப்படைத்துவிட்டு யாரும் அறியா இடத்திற்கு சென்று விடுகிறாள். மறுபுறம் கார்த்திக் தற்கொலை செய்து கொள்வது போன்றும் காண்பிக்கப்பட்டது.
இரண்டாவது சீசன் சுந்தரி IAS அதிகாரியாக ஏழு வருடங்கள் கழித்து வருகிறாள். இதில் வெற்றி மற்றும் அவரின் மகன் அகிலன் என புது கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆகினர். சுந்தரி மற்றும் வெற்றிக்கு இடையில் காதல் மலர்கிறது. அதற்கு தடையாக கார்த்திக் மறுபடியும் வருகிறார். தடைகள் அனைத்தையும் கடந்து இருவரின் அழகான திருமணத்துடன் இந்த மெகா தொடர் முடிவடையவுள்ளது.
இது குறித்த உருக்கமான பதிவை இந்த சீரியலின் கதாநாயகியான கேப்ரில்லா செல்லஸ் இரண்டு நாட்களுக்கு முன் பதிவிட்டுள்ளார்,
“மேடையின்றி நடிக்கும் சில மனிதர்களும் உண்டு, மேடையில் நடிக்கும் கலைஞர்களும் உண்டு” My Evergreen “Sundari”
“கடைசி நாள், கடைசி ஷாட், கடைசி உணர்ச்சிகள், சுந்தரி, உன்னை மிகவும் மிஸ் செய்வோம். நான் கற்றுக் கொண்ட பாடங்கள், அன்பு, மற்றும் சிரிப்பை என்னுடன் என்றென்றும் எடுத்து செல்வேன். அற்புதமான இந்த 4 வருடங்களுக்கு ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது நன்றி.”
சீரியல் பெயர் | சுந்தரி |
மொத்த சீசன் | 2 |
சீசன் 1 எபிசொட் | 762 |
சீசன் 2 எபிசொட் (தற்போது வரை) | 369 |
நடிகர்கள் | கேப்ரில்லா செல்லஸ், ஜிஷ்ணு மேனன், கிருஷ்ணா, ஸ்ரீகோபிகா நீலநாத் |
‘சுந்தரி’ க்ளைமேக்ஸ் ஷூட்டிங்… ஏழு மணிக்கு வரப்போகும் ‘மூன்று முடிச்சு’!
‘சுந்தரி’ மெகா சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் கேப்ரேல்லா செல்லஸ் நேற்று தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் pink உடையில் மிடுக்கான தோற்றத்தில் தான் தாய்மை அடைந்ததை அதிகாரபூர்வமாக அந்த இனிப்பான செய்தியை தனது ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]