Home Serial பல மாற்றங்கள், திருப்பங்கள் நிறைந்த இந்த வார Top 10 Serial -கள் Promo…

பல மாற்றங்கள், திருப்பங்கள் நிறைந்த இந்த வார Top 10 Serial -கள் Promo…

TRP ரேட்டிங்கில் அதிரடி மாற்றம் கொண்ட இந்த வார top 10 சீரியல்கள்... 

by Sudhakaran Eswaran

TRP ரேட்டிங்கில் அதிரடி மாற்றம் கொண்ட இந்த வார top 10 Serial-கள்… 

தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒவ்வொரு வாரமும் TRP ரேட்டிங்கில் ஏற்ற இறக்கம் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சில சீரியல்கள் TRP அதிரடியாக குறைந்தும், சில Serial -கள் டாப் 10 லிஸ்டிலும் இணைந்துள்ளது. 

Untitled design 49

சிங்க பெண்ணே:

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த Serial இந்த வாரத்தில் 9.03 TRP புள்ளிகள் கொண்டு முதலிடத்தில் உள்ளது. மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள். தனது அக்காவிற்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என சுயம்புலிங்கம் தரும் பிரச்சனைகளை பொறுத்து கொள்ளும் ஆனந்தி. ஆனால் மீண்டும் மீண்டும் வம்பிழுக்கும் சுயம்புலிங்கம் என இந்த வார ப்ரோமோ வெளியானது. 

கயல் சீரியல்:

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் Serial இந்த வாரத்தில் 8.58 TRP புள்ளிகள் கொண்டு 2-வது இடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வேதவள்ளியிடம் ஆசிர்வாதம் வாங்க சென்ற இடத்தில் வேதவள்ளி அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட அவரை காப்பாற்ற நினைக்கும் கயல் என இந்த வார ப்ரோமோ 

மருமகள்:

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான மருமகள் இந்த வாரம் 7.63 TRP ரேட்டிங் கொண்டு 3-வது இடத்தில் உள்ளது. எலியும், பூனையுமாக சண்டை போட்டுக்கொண்ட அதிரை மற்றும் பிரபு இருவரும் மனம் மாறி இருவீட்டாரும் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, கல்யாண வேலைகள் சிறப்பாக நடைபெறுவது போன்ற ப்ரோமோ 

வானத்தை போல:

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் Serial வானத்தை போல. எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வார promo வெளியாகியுள்ளது. இந்த வாரம் 7.52 TRP புள்ளியில் 4-வது இடத்தில் உள்ளது. துளசியின் மாமாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில் சின்ராசுவின் அருமை தெரிந்து கொண்ட குடும்பம். தற்போது நிறைவு பகுதியை அடைந்துள்ளது. 

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி Serial முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 7.21 TRP புள்ளியில் 5-வது இடத்தில் உள்ளது. சுந்தரியின் கல்யாணத்தை நிறுத்த திட்டமிடும் கும்பல், அதிலிருந்து மீண்டு வருவாரா சுந்தரி என்ற வகையில் ப்ரோமோ வீடியோ 

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியலில் வந்துள்ளது. இந்த வாரம் 7.06 TRP புள்ளியில் 6-வது இடத்தில் உள்ளது. விஜய்யை திருமணம் செய்த மல்லி. விஜய், மல்லிக்கு தாலி கட்டும் சமயம் மல்லிக்கு தலை சுற்றுவது போல இந்த வார ப்ரோமோ வீடியோ  

சிறகடிக்க ஆசை சீரியல்:

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.90 TRP புள்ளிகள் கொண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் TRP குறைந்து 7-வது இடத்தில் உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு TRP ரேட்டிங் குறைந்துள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். சத்யாவின் பிறந்த நாளிற்கு கோவிலில் கூல் ஊத்த சென்ற மீனா, முத்துவின் பேச்சை மீறி சென்றதால் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பில் ப்ரோமோ வெளியானது 

பாக்கியலட்சுமி சீரியல்:

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 5.66 TRP புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். எழிலை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் பாக்கியா. பின்னர் வீட்டில் விசேஷம் நடைபெறும் போது எழில் வீட்டிற்கு வர வேண்டும் என நினைக்கும் பாக்கியா குடும்பம் என இந்த வார ப்ரோமோ 

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்:

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 5.44 TRP புள்ளிகள் கொண்டு 9-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். மயில் அனுப்பிய போட்டோக்களை பார்த்து சந்தோஷமடையும் பாண்டியன், அடுத்து தனது மனைவியிடம் வீடியோ காலில் பேசும் பாண்டியன் என காமெடியான ப்ரோமோ வெளியானது.  

இராமாயணம்:

சில மாதங்களாக ஒளிபரப்பாகும் இராமாயணம் தற்போது TRP அதிகம் பெற்று டாப் 10 சீரியல் லிஸ்டில் இணைந்துள்ளது. இந்த வாரம் 5.35 TRP புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. புராண கதையான இராமாயணத்தை தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.