Home Serial விறுவிறுப்பும், எதிர்பார்ப்பும் நிறைந்த இந்த வார Top 10 Tamil Serial-கள்

விறுவிறுப்பும், எதிர்பார்ப்பும் நிறைந்த இந்த வார Top 10 Tamil Serial-கள்

அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பை குறைக்காமல் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்து ஒவ்வொரு வாரமும் சுவாரசியம் நிறைந்து Tamil Serial-கள் ஒளிபரப்பாகி வருகிறது.  

by Sudhakaran Eswaran

அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பை குறைக்காமல் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்து ஒவ்வொரு வாரமும் சுவாரசியம் நிறைந்து Tamil Serial-கள் ஒளிபரப்பாகி வருகிறது.  

இந்த ஆண்டில் 7 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 8-வது மாதத்தில் முதல் வாரம் பல திருப்பங்கள் கொண்டு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பல சீரியல்கள் TRP ரேட்டிங்கில் மாற்றம் கொண்டு அதிகரித்து Top 10 Tamil Serial வரிசையில் இடம் பெற்று பின்னர் TRP குறைந்து விடுகிறது.  

Top 10 Tamil Serial TRP rating

இந்தவாரம் TRP ரேட்டிங் அதிகம் கொண்ட Top 10 Tamil Serial லிஸ்ட்.   

சிறகடிக்க ஆசை சீரியல்:

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 9.18 TRP புள்ளிகள் கொண்டு Top 10 Tamil Serial பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சிறகடிக்க ஆசை சீரியல். நீண்ட நாட்களுக்கு பிறகு TRP ரேட்டிங் அதிகரித்து முதலிடத்திற்கு வந்துள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். க்ரிஷ்யை தத்தெடுத்து வளர்க்க நினைக்கும் முத்து, அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஜயா. ரோகினி என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் ப்ரோமோ வீடியோ வெளியானது. 

சிங்க பெண்ணே:

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் இந்த வாரத்தில் 8.67 TRP புள்ளிகள் கொண்டு 2-வது இடத்தில் உள்ளது. மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள். ஆனந்தியை பல வழியில் தொந்தரவு செய்து வந்த மித்ரா, மித்ராவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஆனந்தி என விறுவிறுப்பான ப்ரோமோ வீடியோ.  

கயல் சீரியல்:

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 8.40 TRP புள்ளிகள் கொண்டு 3-வது இடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். TRP ரேட்டிங் குறைந்தாலும் அதே இடத்திலேயே இருந்து வருகிறது. நிச்சயதார்த்தம், pre- wedding என கல்யாண வேளை ஒரு பக்கம்  இருந்தாலும், கயலின் திருமணத்தை நிறுத்த பலரும் முயற்சி செய்துவரும் நிலையில் எழில் தான் தனது கணவர் என கயல் உறுதியாக உள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ இந்த வாரம் வெளியானது. 

மருமகள்:

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான மருமகள் இந்த வாரம் 8.04 TRP ரேட்டிங் கொண்டு 4-வது இடத்தில் உள்ளது. விறுவிறுப்பான ப்ரோமோ கொண்டு இந்த வாரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதிரைக்கு தனது அப்பாவை முதலாளி ஆக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் ஆதிரை அப்பாவிற்கு பிரபு குடும்பத்துடன் சம்பந்தம் வைக்க வேண்டும் என ஆசை. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற திருமணத்திற்கு சம்மதித்த ஆதிரை. அடுத்து நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகள் கொண்ட ப்ரோமோ வீடியோ. 

பாக்கியலட்சுமி சீரியல்:

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 7.75 TRP புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். ராதிகா வாழ்வில் வந்த பிறகு பாக்கியலட்சுமி குடும்பத்தை விட்டு ஓரம்கட்டப்பட்ட கோபி. இதை ராதிகாவிடம் கூற என்னை விவாகரத்து செய்து விட்டு பாக்கியலட்சுமி குடும்பத்துடன் செல்லுமாறு கூறும் ராதிகா. அதன் பின் கோபி செய்யும் செயல் என இந்த வார ப்ரோமோ வீடியோ. 

வானத்தை போல:

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வார promo வெளியாகியுள்ளது. இந்த வாரம் 7.56 TRP புள்ளியில் 6-வது இடத்தில் உள்ளது. துளசியின் மாமாவை காண மருத்துவமனைக்கு வரும் சின்ராசு, வீரசிங்கம் சின்ராசுவை பிடிக்க மருத்துவமனை வருகை. விரசிங்கத்திடம் இருந்து தப்பித்து துளசியை சந்திப்பார சின்ராசு என திருப்பங்கள் கொண்ட ப்ரோமோ. 

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியலில் வந்துள்ளது. இந்த வாரம் 7.03 TRP புள்ளியில் 7-வது இடத்தில் உள்ளது. விஜய்யின் மகளை பார்த்துக்கொள்ளும் மல்லி. விஜய்யின் மேல காதல் கொண்ட மல்லி என இந்த வார் ப்ரோமோ. 

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்:

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.86 TRP புள்ளிகள் கொண்டு 8-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். மீனாவின் வீட்டிற்க்கே சென்று சவால் விடும் மீனாவின் கணவர். அரசு வேலை வாங்கி விடுவேன் என கூறும் மீனாவின் கணவர். அதை செல்போன் மூலம் பார்த்து ஆனந்த கண்ணீர் விடும் மீனா. 

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 6.62 TRP புள்ளியில் 9-வது இடத்தில் உள்ளது. சுந்தரின் திருமணம் நடைபெறும் போது வந்த நோட்டீஸ். அதில் என்ன இருக்கிறது என சுவாரஸ்யமாக காட்டும் வகையில் இந்தவார ப்ரோமோ. 

சின்ன மருமகள்:

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து விஜய் டிவியில் ஓளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியல் லிஸ்டில் இணைந்துள்ளது. நவீன் குமார், சுவேதா முக்கியமாக கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த வாரம் 5.73 TRP ரேட்டிங் கொண்டு 10-வது இடத்தில் உள்ளது. தமிழை பழிவாங்க நினைக்கும் ஈஸ்வரி, தமிழின் திருமணத்தை நிறுத்த பல திட்டம் தீட்டும் ஈஸ்வரி. அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ப்ரோமோ வீடியோ. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.