Home Serial இந்த வாரம் என்னாச்சு, ஆர்வத்தை அதிகரிக்கும் டாப் 10 சீரியல்கள்

இந்த வாரம் என்னாச்சு, ஆர்வத்தை அதிகரிக்கும் டாப் 10 சீரியல்கள்

பல திருப்பங்கள், பரபரப்பு நிறைந்த Serial-கள் ஒவ்வொரு வாரமும் TRP ரேட்டிங்கில் மாற்றம் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. 

by Sudhakaran Eswaran

பல திருப்பங்கள், பரபரப்பு நிறைந்த Serial-கள் ஒவ்வொரு வாரமும் TRP ரேட்டிங்கில் மாற்றம் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. 

TRP Rating Tamil serial

சிறகடிக்க ஆசை:

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 8.92 TRP புள்ளிகள் கொண்டு முதலிடத்தில் உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு TRP ரேட்டிங் அதிகரித்து முதலிடத்திற்கு வந்துள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். சுந்தராஜனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, நகையை திருடிய பிரச்சனையால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பம் கொண்ட promo வீடியோ வெளிவந்துள்ளது.

சிங்க பெண்ணே:

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் இந்த வாரத்தில் 8.18 TRP புள்ளிகள் கொண்டு 2-வது இடத்தில் உள்ளது. மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள். ஆனந்தியும், அன்புவும் எங்கே சென்றிருப்பார்கள் என தெரியாமல் குழப்பத்தில் தேடி வரும் மகேஷ். அடுத்து என்ன நடக்கும் என விறுவிறுப்பு நிறைந்த promo.

கயல்:

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் serial இந்த வாரத்தில் 7.78 TRP புள்ளிகள் கொண்டு 3-வது இடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். TRP ரேட்டிங் குறைந்தாலும் அதே இடத்திலேயே இருந்து வருகிறது. எழில் கல்யாணத்தை தடுக்க நினைபவர்களுக்கு கயல் தரும் பதிலடி. எழில் தான் தந்து கணவர் என முடிவெடுத்த கயல். அடுத்து என்ன நடக்கும் என பார்க்கலாம்.

மருமகள்:

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான மருமகள் இந்த வாரம் 7.65 TRP ரேட்டிங் கொண்டு 4-வது இடத்தில் உள்ளது. பழைய நண்பர்கள் சந்தித்து பேசிய போது ஒரு திருப்பம் ஏற்பட, ஆதிரையும், பிரபுவும் ஒன்று சேர முடிவெடுக்கும் அவர்களது அப்பாக்கள். சீரியலில் அடுத்த திருப்பம் கொண்ட promo வீடியோ.

பாக்கியலட்சுமி:

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 7.47 TRP புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். வீட்டிற்கு செல்லாமல் நண்பர்களுடன் வெளியே சென்ற இனியா, பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தவிக்கும்படி promo. இன்னொரு பக்கம் வீட்டிற்கு இனியா சென்றாரா என தவிக்கும் பாக்கியலட்சுமி. TRP ரேட்டிங்கில் அதிகரித்துள்ளது இந்த வாரம்.

வானத்தை போல:

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வார promo வெளியாகியுள்ளது. இந்த வாரம் 7.16 TRP புள்ளியில் 6-வது இடத்தில் உள்ளது. வெற்றியிடம் இருந்து காப்பாற்றி போலீஸில் புகார் கூறிய போது வீரசிங்கம் செய்த செயலால் அதிர்ந்து போகிறார்.

பாண்டியன் ஸ்டோர் 2:

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.94 TRP புள்ளிகள் கொண்டு 7-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். மீனாவின் அப்பா ஆசைப்படி அரசு வேலையில் உள்ள மாப்பிள்ளை வேண்டும் என மீனாவிடம் பேசாமல் இருக்கும் அவரது அப்பா. மீனாவின் அப்பா ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைக்கும் மீனாவின் கணவர். சுவாரஸ்யம் நிறைந்த promo வீடியோ.

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியலில் வந்துள்ளது. இந்த வாரம் 6.64 TRP புள்ளியில் 8-வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் TRP குறைந்துள்ளது மல்லி சீரியல். மல்லி குழந்தையிடம் பேசாமல் இருப்பதால் தவிக்கும் குழந்தை. போனில் சந்தோஷமான செய்தியை கேட்டதும் சந்தோஷமான மல்லி.

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 6.30 TRP புள்ளியில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் TRP ரேட்டிங்கில் குறைந்துள்ளது சுந்தரி சீரியல். வெற்றியிடம் பேச சென்ற போது சில உண்மைகள் தெரிய வர கோபமடையும் சுந்தரி. கார்த்திக்கின் சுயரூபம் தெரிய வர அடுத்தடுத்த திருப்பங்கள் கொண்ட promo.

சின்ன மருமகள்:

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து விஜய் டிவியில் ஓளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியல் லிஸ்டில் இணைந்துள்ளது. நவீன் குமார், சுவேதா முக்கியமாக கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த வாரம் 5.84 TRP ரேட்டிங் கொண்டு 10-வது இடத்தில உள்ளது.  சேதுவை வலகப்பிற்கு தெரியாமல் கூட்டி வரும் அவரது மனைவி, இதை அறிந்த சேது கோபமடைய அடுத்து என்ன நடக்கும் என இந்த வாரம் தெரிய வரும்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.