தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் Baakiyalakshmi . இந்த சீரியலில் இன்றைய எபிசோடில்(01-05-2024) ரூமுக்கு வந்த கோபி ராதிகா வேலை செய்வதை பார்த்து ரெஸ்ட் எடுக்காம என்ன பண்ணிட்டு இருக்க என கேட்க சின்ன வேலை தான் முடிஞ்சிடுச்சு என்று ராதிகா சொல்கிறார்.
அதன் பிறகு ‘’நான் நேரா நம்ம கிச்சனுக்கு தான் போனேன். பாக்கியா என்னமோ நான் பெரிய தப்பு பண்ணு மாதிரி முறைச்சிகிட்டே இருந்தா, நம்ம பிசினஸ்ல முன்னேறதுல அவளுக்கு பொறாமை” என்றவள் பாக்யாவுக்கு தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியும் என்கிற அதிர்ச்சி செய்தியை கோபிக்கு கொடுக்கிறாள் ராதிகா.
கோபி அவளுக்கு எப்படி தெரியும் என்று கேட்க ”நான் சொல்லனும்னு சொல்லல அவங்களே கண்டுபிடிச்சுட்டு என்கிட்ட கர்ப்பமா இருக்கீங்களானு கேட்டாங்க” என ராதிகா கோபியிடம் சொல்ல ”நீ இல்லன்னு சொல்ல வேண்டியது தானே” என்று கோபி சொல்ல என்னால் அப்படி மறுக்க முடியல ஆமாம்னு சொல்லிட்டேன் என்கிறாள்.
பாக்யாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிடுச்சு அவங்க மூலமா மத்தவங்களுக்கு தெரியுறதுக்குள்ள நாமளே சொல்லணும். மறைஞ்சி மறைஞ்சி மாத்திரை சாப்பிட்டுகிட்டு இருக்க முடியல கூடிய சீக்கிரம் சொல்லிடுங்க என்று ராதிகா சொல்ல கோபி கண்டிப்பா சொல்லிடலாம் என்கிறான்.
அடுத்ததாக இனியா விமலுடன் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் சேட் செய்து கொண்டிருக்க பாக்கியா யார் அது என்று கேட்டவள் ”பேச வேணாம்னு சொல்லல நீ அளவா பேசு ஒழுங்கா படி படிச்சு வாழ்க்கையில முன்னேறினாதான் திருமண வாழ்க்கை எல்லாமே நல்லபடியா அமையும்” என்று அட்வைஸ் செய்கிறாள். இனியா ”நீயும் தான் பழனிச்சாமி சார் கிட்ட பேசுற” என்று திருப்பி கேட்க ”நாங்க என்ன பார்த்ததுமா ஃபிரண்டாகி பேசறோம்” என்கிறாள் பாக்யா. உடனே இனியா ”உனக்கு நான் யாரையாவது லவ் பண்ணிடுவேன்னு பயமா இருக்கா” என்று கேட்க, ”அதெல்லாம் இல்ல நான் உனக்கு அம்மாடி சொல்ல வேண்டியது என்னுடைய கடமை” என்கிறாள்.
மறுநாள் காலையில் பாக்யாவும் செல்வியும் கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க ஈஸ்வரி காபி குடித்துக் கொண்டிருக்க கையில் பால் பாக்கெட் உடன் ராதிகா கிச்சனுக்கு வருகிறார். போனில் இன்னைக்கு ஆபீஸ் வரல வீட்ல இருந்து வேலை செய்யுறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க இன்னும் உனக்கு உடம்பு சரி ஆகலையா என்று ஈஸ்வரி கேட்க இப்ப பரவாயில்ல வாந்தி கொஞ்சம் கம்மியா இருக்கு போக போக நின்னுடும் என்று சொல்கிறாள்.
பிறகு ஈஸ்வரி இருப்பதால் ராதிகா வெளியே கிளம்ப ஏன் சமைக்க தானே வந்த சமைக்கலையா என்று கேட்க பாக்யா இன்னும் பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும் என்று சொல்ல ராதிகா கண்ணை காட்டிவிட்டு வெளியே வருகிறாள்.
வாக்கிங் சென்ற கோபி வீட்டுக்குள் நுழைய ராதிகாவை பார்த்ததும் ஆல் தி பெஸ்ட் சொல்லு அம்மாகிட்ட விஷயத்தை சொல்ல போறேன் என்று ஓவர் பில்டப்புடன் கிச்சனுக்கு வருகிறான். கிச்சனில் பாக்கியாவும் செல்வியும் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறான்.
கோபி ஈஸ்வரியை வெளியே கூப்பிட அவள் கால் வலிக்குது உடனே வர முடியாது என்று சொல்ல கோபி எப்படியாவது விஷயத்தை சொல்லி விட வேண்டும் என்று முயற்சி செய்ய பாக்யா இந்த உருளைக்கிழங்கு வேற வேகவே மாட்டுது நேரம் காலம் தெரியாம உசுர வாங்குது என டிஸ்டர்ப் செய்து கொண்டே இருக்கிறாள்.
இதனால் கோபி விஷயத்தை சொல்லாமல் நீங்க பொறுமையா எழுந்து வெளியே வந்த அப்புறம் பேசிக்கலாம் என்று வெளியே வர ராதிகா முறைக்க கோபி அப்படியே திரும்பி மேலே வந்து விடுகிறான்.
மேலே வந்த ராதிகா அவர்கள் என்னமோ பண்ணிக்கிட்டு போறாங்க நீங்க விஷயத்தை சொல்ல வேண்டியது தானே இப்பவே வீட்ல இருக்காங்க யார் யார் என்னென்ன சொல்லுவாங்கனு பயந்துகிட்டு இருக்கேன் என்கிறாள். விஷயத்தை சொல்லிட்டு நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம். நீங்க, நான் மயூரி பிறக்க போற குழந்தை எல்லாரும் ஒண்ணா சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்கிறாள். நீ சொல்றதுதான் சரி சீக்கிரம் அம்மாகிட்ட விஷயத்தை சொல்லிடுறேன் என்கிறான் கோபி.
அடுத்து ராதிகா வெளியே வந்ததும் கோபி அம்மாவிடம் எப்படி விஷயத்தை சொல்வது என்று விதவிதமாக பேசி முயற்சி செய்து பார்க்கிறான். இத்துடன் இன்றைய ‘பாக்கியலட்சுமி’ சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]