விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘Siragadikka Aasai’. இந்தக் கதையில் அண்ணாமலையாக நடிக்கும் பிரபல சினிமா நடிகர், இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனுக்கு மூன்று மகன்கள். இவரது மனைவி பெயர். விஜயா. இந்த தம்பதியினரின் மூத்த மகன் மனோஜ். நன்றாகப் படித்தவன். நல்ல வேலையில் இருந்தவன். இரண்டாவது மகன் முத்து. இவன்தான் கதையின் நாயகன். சிறுவயதில் பாட்டி மூலம் வளர்க்கப்பட்ட இவன் சரியாகப்படிக்காமல் டாக்ஸி ஓட்டுகிறான். குடிப்பழக்கத்துக்கு ஆளானவன் என்பதோடு, அதிகப்படியாக கோபப்படுபவன். மூன்றாவது மகன் ரவி. மூன்று மகன்களுக்குமே திருமணம் நடந்துமுடிந்துவிட்டது. ரவியின் மனைவி பெயர் ஸ்ருதி.
இதில் மூத்தவன் மனோஜின் மனைவிக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. அவளது முதல் கணவன் விபத்தில் இறந்துவிட்டான். இவளது உண்மையான பெயர் கல்யாணி. ஆனால், இந்த உண்மையை மறைத்துவிட்டு தான் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள் என மனோஜைத் திருமணம் செய்துகொள்ளும் கல்யாணி பெயரையும் ரோகிணி என மாற்றிக்கொள்கிறாள். அம்மா விஜயாவுக்கு இரண்டாவது மருமகளான மீனாவைக் கண்டாலே பிடிக்காது. காரணம் அவள் கோயில் வாசலில் பூ விற்பவள். ரோகிணியைக் கொண்டாடும் விஜயா மீனாவை நசுக்குகிறாள். ஒருகட்டத்தில் மீனாவின் அன்பை புரிந்துகொள்ளும் முத்து மனைவிக்கு ஆதரவாக அம்மா விஜயா, அண்ணன் மனோஜ் அவள் மனைவி ரோகிணியை எதிர்த்து நிற்கிறான். இவர்களுக்குள் நடக்கும் குடும்ப பிரச்சனைகளைவைத்து ‘சிறகடிக்க ஆசை’ டீம் கதையை சுவாரஸ்யமாக நகர்த்திகொண்டுபோகிறது. தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நம்பர் 1 தொடர் ‘சிறகடிக்க ஆசை’தான்.
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில்(01-05-2024) ஹீரோ முத்துவின் தம்பியான மனோஜ் ரோகிணியின் அப்பா ”என் பேர்ல 15 லட்சம் ரூபா பணம் அனுப்பியிருக்காரு” என்று திரும்பத் திரும்ப சொல்ல முத்து ”உன் பேர்ல பணம் வந்து இருக்கா” என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார்.
பிறகு அண்ணாமலை, மீனா, ஸ்ருதி என எல்லோரிடமும் ”உங்க அப்பா உனக்கு பணம் தரார்னா உன் பேர்லதானே பணம் தருவாங்க… உன் புருஷனுக்கா பணம் அனுப்புவாங்க” என்று கேட்க எல்லாரும் ”எங்க அப்பா எனக்குத்தான் அனுப்புவாரு” என்று சொல்ல முத்து ”அப்படி இருக்கும் போது ரோகிணி அப்பா மட்டும் எதுக்கு மனோஜ் பேர்ல பணத்தை அனுப்பணும்” என்று மடக்கி பிடிக்க மனோஜும், ரோகிணியும் விழி பிதுங்கி நிற்கிறார்கள். விஜயாவும் ”மனோஜ் உன் பேர்லயா பணம் வந்துச்சு” என்று கேட்க ரோகினியும் பதற்றம் ஆகிறாள்.
உடனே ரோகிணி ”அவர்தான் பிசினஸ் ஆரம்பிக்க போறாருல… நான் வேலை பார்க்குறேன்… என் பேர்ல பணம் அனுப்புனா பின்னாடி ஐடி பிரச்சனை எதுவும் வரக்கூடாதுன்றதுக்காக நான் தான் மனோஜ் பேர்ல அனுப்ப சொன்னேன்” என்று சமாளிக்கிறார். உடனே விஜயா ”நீ செஞ்சா சரியா தான் இருக்கும்…அவன் பொறாமையில பேசுறான்” என்று சொல்கிறார்.
அதன் பிறகு ரூமுக்கு வந்த ரோகினி மனோஜை பிடித்து திட்டுகிறார். இனிமே பணத்தை பத்தி பேசவே கூடாது என கண்டிஷன் போட ”பணம் இருந்தால் தானே கேள்வி கேட்பான் சீக்கிரம் செலவு பண்ணிடலாம்” என்று வாயை விட பிறகு பிசினஸ் ஏதாச்சுலயாவது இன்வெஸ்ட் பண்ணி விடலாம்னு சொன்னேன் என்று சமாளிக்கிறான். முதல்ல இந்த முத்துவோட பேச்சுக்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்கணும் என்று சொல்ல மனோஜ் அதுக்கு ஸ்விட்ச் நம்ம கிட்ட இல்லையே என்று பதில் சொல்ல மீனா கிட்ட இருக்கு என்று ரோகிணி வெளியே வருகிறாள்.
கிச்சனில் இருக்கும் மீனாவை கூப்பிட்டு ரோகிணி ”எதுக்கு எங்களை கேள்வி கேட்கணும்… நாங்க உங்க விஷயத்துல தலையிடறோமா?” என்று கேட்க எல்லாத்துக்கும் பொறுமையாக இருக்கும் மீனா இந்த முறை பட்டு பட்டுன்னு பதிலடி கொடுத்து ரோகிணியை அதிர்ச்சி அடைய செய்கிறாள். இதனால் ரோகிணி ”இனிமே நாங்களும் உங்கள எதுவும் கேட்க மாட்டோம்… நீங்களும் கேட்காதீங்க” என்று சொல்கிறார். முத்து கிட்ட சொல்லி வையுங்க என்று சொன்னதும் மீனா அதை நீங்களே சொல்லுங்க என்று மீண்டும் பதிலடி கொடுக்க ”நான் வீட்ல பிரச்சனை வேணாம்னு பாக்குறேன் எல்லாரும் சண்டை போடணுமான்னு யோசிச்சு பாருங்க” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.
அதன் பிறகு மீனா முத்துவை பிடித்து திட்ட அந்த பார்லர் அம்மா ஏதாச்சும் சொல்லுச்சா என்று சண்டைக்கு செல்ல மீனா அவனை சமாதானப்படுத்தி வேலைக்கு அனுப்பி வைக்கிறாள்.
அதன் பிறகு சாலையில் ரோகிணி தன் தோழி வித்யாவிடம் நடந்த விஷயங்களை சொல்லிக் கொண்டு நடந்து வர எதிரே வந்த மேனேஜர் ” கல்யணி… நான் அன்னைக்கு உன்கிட்ட பணம் கேட்டேன்… நீ இன்னும் தரல இன்னும் ஒரே நாள்தான் டைம், நீ பணம் தரலைன்னா நேரா உன் வீட்டுக்கு வந்து எல்லா உண்மையை சொல்லிடுவேன்” என்றும் மிரட்ட மனோஜிடம் இருக்கும் பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை வாங்கி கொடுத்து பிரச்னையை சமாளிக்க முடிவெடுக்கிறாள்.
ரோகிணி வீட்டுக்கு வர மனோஜ் படுத்துக்கொண்டு உலகின் பணக்காரர்கள் லிஸ்டை பார்த்தபடி ”எப்படி பணக்காரங்க ஆனாங்க… என்ன பிசினஸ் பண்ணாங்க” என யோசித்தபடி இருக்க ரோகிணி அவனைத்திட்ட ஆரம்பிக்கிறாள். ”மத்தவங்க பண்ணத நாம பண்ணக்கூடாது… நாமளே சுயமா யோசிச்சு ஏதாவது பண்ணனும்” என்று சொல்கிறாள்.
அப்போது மனோஜ் ”என்னோட பார்க் ஃபிரண்டு பணத்தை வட்டிக்கு விட சொன்னாரு” என்று மனோஜ் சொல்ல ”அதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று சொல்லும் ரோகிணி இப்போதைக்கு மனோஜிடமிருந்து பணத்தை வாங்க இது ஒன்றுதான் சரியான ஐடியா என்று யோசித்து ”எனக்கு ஒரு லட்ச ரூபாய் கடனா கொடு” என்று கேட்டு 2000 வட்டியை அனுப்பி ஒரு லட்சத்தை வாங்கிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]