Home Serial முதலிடத்தில் ‘சிறகடிக்க ஆசை’, சரியும் ‘எதிர்நீச்சல்’… இந்த வார டாப் 10 சீரியல்கள் இதோ!…

முதலிடத்தில் ‘சிறகடிக்க ஆசை’, சரியும் ‘எதிர்நீச்சல்’… இந்த வார டாப் 10 சீரியல்கள் இதோ!…

இந்த வாரத்தில் top 10 லிஸ்டில் சீரியல்கள் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் TRP ரேட்டிங் உடன்  இந்த வார top 10 சீரியல்கள்...

by Sudhakaran Eswaran

இந்த வாரத்தில் top 10 லிஸ்டில் சீரியல்கள் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் TRP ரேட்டிங் உடன்  இந்த வார top 10 சீரியல்கள்…

இந்த வார சின்னத்திரைக்கான TRP ரேட்டிங் வியாழக்கிழமையான இன்று காலை வெளியானது. இந்த ஆண்டின் 21-வது வார ரேட்டிங்கில் விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த வாரம் “சிறகடிக்க ஆசை” 9.52 TRP புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் இந்தவாரம் சற்றே குறைந்து 9.18 TRP மட்டுமே பெற்றிருக்கிறது.

கடந்த வாரத்தைப்போலவே இந்தவாரமும் ‘பாக்யலட்சுமி’ இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. ‘பாக்யலட்சுமி’ கடந்த வாரத்தைக் காட்டிலும் குறைந்திருந்தாலும் 8.32 TRP ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது. மூன்றாவது இடத்தையும் 0.02 TRP ரேட்டிங் வித்தியாசத்தில் விஜய் டிவியே பிடித்திருக்கிறது. சன் டிவியின் ‘கயல்’ தொடர் 7.70 TRP ரேட்டிங் பெற்றிருக்க விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ட்ஸ் – தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ 7.72 ரேட்டிங் பெற்று மூன்றாம் இடத்தைப்பிடித்திருக்கிறது. சன் டிவியின் ‘சிங்கப்பெண்ணே’ 7.65 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

ஆறாவது இடத்தை சன் டிவியின் ‘எதிர்நீச்சல்’ 7.11 ரேட்டிங்குடன் பிடித்திருக்கிறது. ஒரு காலத்தில் 12 TRP புள்ளிகள் பெற்று தமிழகத்தின் நம்பர் 1 சீரியலாக இருந்த ‘எதிர்நீச்சல்’ கடந்தவாரம் 7.26 TRP ரேட்டிங் பெற்று இருந்தது. அதற்கு முந்தைய வாரம் 7.61 TRP புள்ளிகளாக இருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது எதிர்நீச்சல். 

ஏழாவது இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஆஹா கல்யாணம்’ பிடித்திருக்கிறது. இந்த வாரம் ‘ஆஹா கல்யாணம்’ 6.73 TRP புள்ளிகள் பெற்றிருக்கிறது. எட்டாவது இடத்தை சன் டிவி தொடர்களான ‘வானத்தைப்போல’ 6.47 புள்ளிகளுடன் பிடிக்க, ‘சுந்தரி’ 6.42 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தைப்பிடித்திருக்கிறது. விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் 6.16 TRP பெற்று பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 

சன் டிவியில் கடந்த மாதம் புதிதாக தொடங்கப்பட்ட தொடரான ‘மல்லி’ பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்த ஸ்லாட்டில் விஜய் டிவியைவிட குறைவாக 5.92 ரேட்டிங் பெற்று இரண்டாம் இடத்திலேயே இருக்கிறது. அதேசமயம் மாலை 6.30 மணிக்கு தொடங்கப்பட்ட ‘இராமாயணம்’ கடந்த வாரத்தை விடவும் பெரிய அளவில் முன்னேறாமல் 4.87 ரேட்டிங்கைப்பெற்றிருக்கிறது. இது கடந்த வாரம் 4.85 ரேட்டிங்கைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.