Home Serial வார வாரம் பல திருப்பங்கள் கொண்ட டாப் 10 தமிழ் சீரியல்கள்

வார வாரம் பல திருப்பங்கள் கொண்ட டாப் 10 தமிழ் சீரியல்கள்

ஒவ்வொரு வாரமும் பல எதிர்பார்ப்புகள் நிறைந்து ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. TRP ரேட்டிங்கில் இடம்பெற்ற டாப் 10 சீரியல்கள் promo வீடியோ.

by Sudhakaran Eswaran

ஒவ்வொரு வாரமும் பல எதிர்பார்ப்புகள் நிறைந்து ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. TRP ரேட்டிங்கில் இடம்பெற்ற டாப் 10 சீரியல்கள் promo வீடியோ.  

Pandian Stores

சிறகடிக்க ஆசை சீரியல்:

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 9.04 TRP புள்ளிகள் கொண்டு முதலிடத்தில் உள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ரோகிணி மகனுக்கு துணி எடுக்கவந்த இடத்தில் விஜயாவிடம் மாட்டிக்கொண்ட ரோகிணி. அடுத்தடுத்து என்ன நடக்கும் என திருப்பங்கள் கொண்ட promo வீடியோ. 

கயல் சீரியல்:

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 8.81 TRP புள்ளிகள் கொண்டு 2-வது இடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். TRP ரேட்டிங் குறைந்தாலும் அதே இடத்திலேயே இருந்து வருகிறது. கயல், எழிலின் திருமணம் நடைபெறும் நிலையில் அதற்க்கான வேலையில் ஈடுபடும் கயல். பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும் திருமணம் சார்ந்த நிகழ்வில் மகிழ்ச்சியாக கயல் இருந்துவரும் வகையில் ப்ரோமோ வீடியோ வெளியானது. 

பாக்கியலட்சுமி சீரியல்:

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 8.67 TRP புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். TRP ரேட்டிங்கில் அதிகரித்துள்ளது இந்த வாரம். பாக்யலட்சுமியின் கவன குறைவால் இனியாவை சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை என கோபி பாக்யலட்சுமியிடம் கூறினார். இனியாவை தன் வீட்டிற்கு வரும்படி கோபி கூற, வர மறுக்கும் இனியா. விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறும் கோபி இவ்வாறு இந்த வார ப்ரோமோ வீடியோ வெளியானது.

சிங்க பெண்ணே:

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் இந்த வாரத்தில் 8.07 TRP புள்ளிகள் கொண்டு 4-வது இடத்தில் உள்ளது. மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள். அன்பு, ஆனந்தி, மகேஷ் ஆகிய மூவருக்கு ஏற்படும் பிரச்சனையை கூறும் வகையில் விறுவிறுப்பான promo இந்த வாரம் வெளியானது.

மருமகள்:

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான மருமகள் இந்த வாரம் 8.05 TRP ரேட்டிங் கொண்டு 5-வது இடத்தில் உள்ளது. விறுவிறுப்பான ப்ரோமோ கொண்டு இந்த வாரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பிரபு, ஆதிரைக்கு இடையே நடக்கும் சண்டை, ஆனால் இரு குடும்பமும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சிக்கிறது. இவ்வாறு இந்த வார ப்ரோமோ வெளியானது.

வானத்தை போல:

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வார promo வெளியாகியுள்ளது. இந்த வாரம் 7.35 TRP புள்ளியில் 6-வது இடத்தில் உள்ளது. குட்டிமாவின் கணவருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் சோகத்தில் இருக்கும் குட்டிமா. அண்ணனிடம் விஷத்தை கூற வேண்டும் என முடிவெடுக்கும் குட்டிமா, இதனால் அண்ணனுக்கு எதாவது ஆபத்து வருமோ என்று குழப்பத்தில் இருக்கும் வகையில் ப்ரோமோ வீடியோ. 

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்:

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 7.30 TRP புள்ளிகள் கொண்டு 7-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு காண்பது என்று குழம்பிய நிலையில் இருக்கும் வகையில் ப்ரோமோ வெளியானது. 

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 7.24 TRP புள்ளியில் 8-வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் TRP ரேட்டிங்கில் குறைந்துள்ளது சுந்தரி சீரியல். சுந்தரி, வெற்றி திருமணம் நடக்குமா?, அடுத்தடுத்த திருப்பம் கொண்ட ப்ரோமோ வீடியோ. 

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியலில் வந்துள்ளது. இந்த வாரம் 6.92 TRP புள்ளியில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் TRP குறைந்துள்ளது மல்லி சீரியல். மல்லி ஒரு கிராமத்தில் தங்கி இருப்பதை அறிந்து அவர்களை கொலை செய்ய வரும் ரவுடி கும்பல். இவ்வாறு ப்ரோமோ வெளியானது.

ஆஹா கல்யாணம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கடந்த சில வாரங்களில் டாப் 10 லிஸ்டில் இல்லாத நிலையில் சென்ற வாரம் top 10 லிஸ்டில் வந்த சீரியல் TRP அதிகம் பெற்று உள்ளது. இந்த வாரம் 6.14 TRP புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. ஐஸ்வர்யாவுக்கு என்னாச்சு, மருத்துவமனையில் பல திருப்பங்கள் கொண்ட இந்த வார ப்ரோமோ. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.