Home Serial சுவாரஸ்யம் நிறைந்த இந்த வாரத்திற்கான Top 10 Serial-கள்

சுவாரஸ்யம் நிறைந்த இந்த வாரத்திற்கான Top 10 Serial-கள்

ஒவ்வொரு வாரமும் serial-கள் பரபரப்பு நிறைந்தும், TRP ரேட்டிங்கில் ஏற்ற இறக்கம் கொண்டும் ஒளிபரப்பாகி வருகிறது.  

by Sudhakaran Eswaran

ஒவ்வொரு வாரமும் serial-கள் பரபரப்பு நிறைந்தும், TRP ரேட்டிங்கில் ஏற்ற இறக்கம் கொண்டும் ஒளிபரப்பாகி வருகிறது.  

தமிழில் முக்கிய டிவி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்றவற்றில் நாடகங்கள், ஷோ-கள் என மக்களின் பொழுதுபோக்கிற்காக தொடர்ந்து எண்டர்டைன்மெண்ட் செய்து வருகிறது. அந்த வகையில் 3 சேனல்களிலும் சேர்த்து கிட்டத்தட்ட 50 நாடகங்கள் வரை ஒளிபரப்பாகி வருகிறது. 

Untitled design 47

அவற்றில் TRP ரேட்டிங் அதிகம் கொண்ட Top 10 சீரியல்-கள் லிஸ்ட் ஒவ்வொரு வாரமும் வரிசைப்படுத்தி வருகிறது.   

சிங்க பெண்ணே:

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் இந்த வாரத்தில் 9.11 TRP புள்ளிகள் கொண்டு முதலிடத்தில் உள்ளது. மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள். சொந்த ஊருக்கு திரும்பும் ஆனந்தி. ஆனந்தியிடம் காதலை சொல்ல காத்திருக்கும் மகேஷ் மற்றும் அன்பு என இந்த வார ப்ரோமோ வீடியோ வெளியானது. 

சிறகடிக்க ஆசை சீரியல்:

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 8.86 TRP புள்ளிகள் கொண்டு 2-வது இடத்தில் உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு TRP ரேட்டிங் குறைந்துள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர். சிறந்த ஜோடி யார் என்ற நிகழ்ச்சியில் முத்து மற்றும் மீனா பங்கு கொண்டனர். மீனா தனது அப்பா எப்படி பார்த்துக்கொண்டாரோ அதேபோல முத்து தன்னை பார்துக்கொள்வதாக கூறும் ப்ரோமோ வீடியோ. 

கயல் சீரியல்:

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 8.76 TRP புள்ளிகள் கொண்டு 3-வது இடத்தில் உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். TRP ரேட்டிங் குறைந்தாலும் அதே இடத்திலேயே இருந்து வருகிறது. கயல், எழில் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வரும் சமயம்  கயலின் மாமா, அத்தை போன்றவர்களின் ஆசிர்வாதத்தோடு தான் கயலின் திருமணம் நடைபெற வேண்டும் என கயலின் அம்மா ஆசைப்படுவதால் அதை நிறைவேற காத்திருக்கும் கயல். அடுத்து என நாடாகும் என சுவாரஸ்யமான ப்ரோமோ. 

மருமகள்:

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான மருமகள் இந்த வாரம் 8.27 TRP ரேட்டிங் கொண்டு 4-வது இடத்தில் உள்ளது. எலியும், பூனையுமாக சண்டை போட்டுக்கொண்ட அதிரை மற்றும் பிரபு இருவரும் மனம் மாறி இருவீட்டாரும் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருப்பது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியானது. 

வானத்தை போல:

சன் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் சீரியல் வானத்தை போல. எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வார promo வெளியாகியுள்ளது. இந்த வாரம் 7.65 TRP புள்ளியில் 5-வது இடத்தில் உள்ளது. துளசியின் மாமாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில் சின்ராசுவை தேடி அலையும் வீரசிங்கம் மற்றும் வெற்றி. இதில் யார் வெற்றி பெறுவர்கள் என சுவாரஸ்யமான ப்ரோமோ.

மல்லி:

சன் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியலில் வந்துள்ளது. இந்த வாரம் 7.44 TRP புள்ளியில் 6-வது இடத்தில் உள்ளது. விஜய்யை திருமணம் செய்த மல்லி. ரஞ்சிதாவிடம் பார்த்து இருக்கும்படி அறிவுரை கூறும் விஜய் என இந்த வார ப்ரோமோ. 

பாக்கியலட்சுமி சீரியல்:

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 7.43 TRP புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள். எழிலை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் பாக்கியா. வீட்டை விட்டு மனைவி, குழந்தையுடன் வெளியேறும் எழில் என இந்த வார ப்ரோமோ வீடியோ. 

சுந்தரி 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சீரியல் இந்த வாரம் 7.11 TRP புள்ளியில் 8-வது இடத்தில் உள்ளது. வெற்றியை திருமணம் செய்து கொள்வேன் என தனது அப்பத்தாவிடம் சத்தியம் செய்த சுந்தரி. ஆனால் அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் கொண்ட ப்ரோமோ. 

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்:

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.79 TRP புள்ளிகள் கொண்டு 9-வது இடத்தில் உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். கணவருடன் வெளியே சென்ற மயில். சந்தோசமாக இருப்பது போன்ற ப்ரோமோ வீடியோ. 

சின்ன மருமகள்:

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து விஜய் டிவியில் ஓளிபரப்பாகி வரும் மருமகள் சின்ன சீரியல் இந்த வாரம் டாப் 10 சீரியல் லிஸ்டில் இணைந்துள்ளது. நவீன் குமார், சுவேதா முக்கியமாக கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த வாரம் 5.77 TRP ரேட்டிங் கொண்டு 10-வது இடத்தில் உள்ளது. தமிழை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய ஈஸ்வரி. தமிழன் அப்பா ஈஸ்வரியிடம் சவால் விடுவது என பரபரப்பான ப்ரோமோ வீடியோ. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.