Home Serial வார வாரம் திருப்பங்கள், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தமிழ் சீரியல்கள், டாப் லிஸ்டில் இந்த வாரம்!!

வார வாரம் திருப்பங்கள், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தமிழ் சீரியல்கள், டாப் லிஸ்டில் இந்த வாரம்!!

இந்த வாரம் எந்தெந்த சீரியல்கள் டாப் லிஸ்டில் இருக்கின்றன.டிவி சேனல்கள் வெளியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ப்ரோமோ வீடியோக்கள்.

by Sudhakaran Eswaran

பிரபல டிவி சேனல்களான சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி ஆகியவற்றில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் டி ஆர் பி ரேட்டிங் அடிப்படையில் மக்களை சென்றடைகிறது. அந்தவகையில் சீரியல்கள் பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரத்தின் தொடர்ச்சியை அந்த வார ப்ரோமோவில் வெளியிட்டு மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சீரியல்கள் டி ஆர் பி ரேட்டிங் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்து வருகிறது.  

சன் டிவி 

சிங்க பெண்ணே சீரியல் 

சன் டிவியில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் இந்த வாரத்தில் 9.02 புள்ளிகள் கொண்டு முதலிடத்தில் உள்ளது.மனீஷா மகேஷ், தர்ஷக் கௌடா ஆகியோர் இந்த சீரியலில் முக்கியமானவர்கள்.  

கயல் சீரியல் 

2021-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 8.91 புள்ளிகள் கொண்டு இரண்டாவதாக உள்ளது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

எதிர்நிச்சல் சீரியல் 

2022-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரத்தில் 8.27 புள்ளிகள் பெற்றும் மூன்றாவது இடத்தில உள்ளது. மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்ரியா இசை போன்றவர்கள் முக்கியமானவர்கள். 

விஜய் டிவி 

சிறகடிக்க ஆசை சீரியல் 

கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 7.21 புள்ளிகள் கொண்டு முதல் இடத்தில உள்ளது. வெற்றி வசந்த், கௌதமி ப்ரியா, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.  

பாக்கியலட்சுமி சீரியல் 

2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 6.56 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில உள்ளது. கே.எஸ்.சுசித்ரா ஷெட்டி, சதீஷ் குமார், ரேஷ்மா பசுபுலேட்டி, ரஞ்சித் ஆகியோர் முக்கியமானவர்கள்.  

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல்

கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 5.87 புள்ளிகள் கொண்டு மூன்றாவது இடத்தில உள்ளது. ஸ்டாலின் முத்து, நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், வசந்த் வாசி ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர். 

ஜீ தமிழ் 

சந்தியா ராகம்  

ஜீ தமிழ் சேனலில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் இந்த வாரம் டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இந்த வார ப்ரோமோவில் பல திருப்பங்கள் ஏற்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.  

வீரா 

அடுத்தடுத்து திருப்பங்கள் கொண்டு கண்மணி ராகவன் திருமணம் நடைபெறுமா என்ற வகையில் ப்ரோமோ வெளியிட்டுள்ளது. இந்த வார டி ஆர் பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

அண்ணா 

 தனது தங்கையின் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வந்து ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் ஆச்சரிய படுத்தும் அண்ணன். பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக ப்ரோமோ இருந்தது. அந்த வகையில் இந்த வாரத்தில் டி ஆர் பி ரேட்டிங்கில் 3 வது இடத்தில உள்ளது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.