Home Serial மீண்டும் 9 ரேட்டிங்கைத்தொட்ட ‘சிறகடிக்க ஆசை’.

மீண்டும் 9 ரேட்டிங்கைத்தொட்ட ‘சிறகடிக்க ஆசை’.

டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் விஜய் டிவி! இரண்டாவது இடத்தில் இருப்பது யார்?

by Sruthi Balasubramanian

சின்னத்திரைக்கான TRP Rating இன்று வெளியாகியிருக்கிறது. இந்த வார ரேட்டிங்படி டாப் 10 இடங்களைப் பிடித்திருக்கும் தமிழ் சீரியல்களில் சிறகடிக்க ஆசை தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் 8.33 TRP Rating இருக்க, 8.15 ரேட்டிங்குடன் மூன்றாவது இடத்தை ‘பாக்யலட்சுமி’ பிடித்திருக்கிறது.

9 ரேட்டிங்கைத்தொட்ட ‘சிறகடிக்க ஆசை’

சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘கயல்’ சீரியலின் TRP Rating இந்தவாரம் 7.58-ஆக குறைந்து நான்காவது இடத்துக்கு வந்துவிட்டது.  விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 7.56 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாவது இடம் பிடிக்க, சன் டிவியில் புதிதாக அறிமுகமான மருமகள் 7.44 ரேட்டிங்குடன் ஆறாவது இடம்பிடித்திருக்கிறது. 

Kayal Serial

சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் 7.04 TRP Rating பெற்று ஏழாவது இடத்தில் இருக்க, விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் 6.85 ரேட்டிங்குடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது. மல்லி 6.82 ரேட்டிங்குடன் ஒன்பதாவது இடத்திலும், விஜய் டிவியின் சின்ன மருமகள் 6.62 TRP Rating 10வது இடத்திலும் இருக்கின்றன.

Malli Serial

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.