Home Serial நிறைவுக்கு வருகிறது இளைஞர்களை கவர்ந்த உப்பு புளி காரம் தொடர்! கடைசி எபிசொட் எப்போது?

நிறைவுக்கு வருகிறது இளைஞர்களை கவர்ந்த உப்பு புளி காரம் தொடர்! கடைசி எபிசொட் எப்போது?

விஜய் டிவி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி பெரும்பாலும் இளைஞர்களை கவர்ந்த புதிய கதைக்களத்தைக் கொண்ட 'உப்பு புளி காரம்' தொடர் ஜனவரி 2ம் தேதி கடைசியாக ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

by Vinodhini Kumar

இன்றைய இளைஞர்களின் பொறுப்புகளையும் ஒரு நடுத்தர குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் காதல், வேலை ஆகியவற்றையும் ஆராயும் ஒரு வித்தியாசமான தொடராக ஒளிபரப்பானது தான் விஜய் டிவியின் ‘உப்பு புளி காரம்‘. எளிமையான கதைக்களத்தில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களுடன் ஒளிபரப்பாகி தனக்கான இடத்தை பிடித்த இந்த தொடர் தற்போது முடிவுக்கு வரவப்போகிறது. ஜனவரி 2ம் தேதி உப்பு புளி காரம் தொடர் கடைசியாக ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல கொரியா நாட்டு தொடரான ‘My Father Is Strange’ என்பதன் கதையை அடிப்படையாகக் கொண்டு தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்றமாதிரியான களம், கதாபாத்திரங்கள், சிக்கல்களை சேர்த்து இயக்குனர் ரமேஷ் பாரதி அவரின் இயக்கத்தில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது. விஜய் தொலைக்காட்சியில் மாலை 4.30 மணிக்கு சனி கிழமைகளில் ஒளிபரப்பாகி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஒளிபரப்பாகியது. 120 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ள இத்தொடர் விரைவில் முடிவடையப்போகிறது ரசிகர்களுக்கு வருத்தமளிப்பதாக அமைந்துள்ளது. 

உப்பு புளி காரம் கதைக்களம் 

மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தங்களின் வாழ்க்கையை ஒரு உணவகத்தை நடத்தி எளிமையாக வாழ்ந்துவரும் சுப்பிரமணி மற்றும் சுப்புலக்ஷ்மி தம்பதியினரின் வாழ்க்கையில் திடீரென ஒரு நாள் சுப்ரமணியன் மகன் எனக் கூறி வீட்டில் ஒரு நபராக இணைகிறார் திப்பு. யார் இந்த திப்பு? நிஜமாகவே இவர் சுப்ரமணியன் மகனா? இவரின் வருகையால் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களும் ஒவ்வொரு பாத்திரத்தின் தனிப்பட்ட வாழ்க்கை என உப்பு புளி காரம் தொடர் நகர்ந்தது. 

உப்பு புளி காரம் நடிகர் நடிகைகள் 

வீட்டின் தலைவர் சுப்ரமணியாக  நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் 

வீட்டின் தலைவியாக கண்டிப்பான அம்மாவாக நடிகை வனிதா கிரிஷ்ணசந்திரன் 

முத்த மகளாக சின்மயியாக நடிகை ஆயிஷா ஸீனத் 

இரண்டாவது பிள்ளையாக ஒரே மகன் உதய்யாக நடிகர் நவீன் 

இரண்டாவது மகள் கீர்த்தியாக நடிகை அஸ்வினி 

கடைசி மகள் யாஷிகாவாக நடிகை தீபிகா 

தனிமையில் விடப்பட்ட மகன் திப்புவாக நடிகர் ராஜ் அய்யப்பா

சின்மயியின் கணவர் ஷிவாவாக நடிகர் கிருஷ்ணா ரகுநாதன் 

உதய் உடைய மனைவி சுசியாக நடிகை பரினா 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.