Home Serial Big Boss நிகழ்ச்சிக்காக விஜய் டிவியில் 5 முக்கிய Serial -களின் நேரம் மாற்றப்பட்டது.   

Big Boss நிகழ்ச்சிக்காக விஜய் டிவியில் 5 முக்கிய Serial -களின் நேரம் மாற்றப்பட்டது.   

விஜய் டிவியில் வரவிருக்கும் Big Boss நிகழ்ச்சிக்காக ஒரு சில Serial- கள் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   

by Sudhakaran Eswaran

சீரியல்களுக்கு பெயர்போன விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை ஒளிபரப்பானாலும் வருடம் முழுவதும் பேசப்பட்டு வரும். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள Big Boss நிகழ்ச்சிக்காக இதுவரை ஒளிபரப்பாகி வந்த ஒரு சில serial-களின் நேரம் மாற்றப்படுகிறது. 

இதுவரை பனிவிழும் மலர் வானம் சீரியல் மாலை 6.00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் வரும் அக்டோபர் 7 -ஆம் தேதி முதல் மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகும். அதேபோல வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும். 

பனிவிழும் மலர் வானம் சீரியல்
Source Image:@vinusha_devi(Instagram)

அதை தொடர்ந்து நீ நான் காதல் serial மாலை 6.00 மணிக்கும், மகாநதி சீரியல் 6.30 மணிக்கும், சின்ன மருமகள் சீரியல் 7.00 மணிக்கும் மாற்றப்படுகிறது. 

Big Boss நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 முதல் 10.30 மணிக்கும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 9.30 முதல் 11.00 மணி வரை ஒளிபரப்பாகும். 

இதுவரை கடந்த 7 சீசனாக கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது சீசன் 8 -ல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான ப்ரோமோ வெளியாகி யார் யார் big boss வீட்டிற்கு வருவார்கள் என சிலரது பெயர் அடிபட்டு வருகிறது. 

மாற்றப்பட்ட சீரியலின் நேரங்கள்.

சீரியல்கள்    மாற்றப்பட்ட நேரம் சீரியல் நடிகர்கள் 
பனிவிழும் மலர் வானம்மதியம் 1.00 – 1.30சித்தார்த் குமரன், ஷில்பா, வினுஷா தேவி, ராயன்.
வீட்டுக்கு வீடு வாசப்படிமதியம் 3.30 – 4.00திரவியம் ராஜகுமாரன், ஸ்ரீதா சிவதாஸ் , ஆர்த்தி சுபாஷ் மற்றும் அவினாஷ்
நீ நான் காதல் சீரியல்மாலை 6.00 – 6.30பிரேம் ஜேக்கப், வர்ஷினி சுரேஷ், சாய் காயத்ரி, சங்கரேஷ் குமார், நவீன் முரளிதர் மற்றும் வி.ஜே.தனுசேக் விஜயகுமார்
மகாநதி சீரியல் மாலை 6.30 – 7.00லக்ஷ்மி பிரியா, சுவாமிநாதன் அனந்தராமன், பிரதிபா, திவ்யா கணேசன், தரணி ஹெப்சிபா, கே.கமுருதீன், ஆதிரை சௌந்தரராஜன்
சின்ன மருமகள்மாலை 7.00 – 7.30நவீன் குமார், ஸ்வேதா, பானுமதி, பிரவீன் தேவா

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.