Home Serial Vijay Tv – யில் ஒளிபரப்பாகும் புது Serial “கண்மணி அன்புடன்”…

Vijay Tv – யில் ஒளிபரப்பாகும் புது Serial “கண்மணி அன்புடன்”…

கண்மணி, வெண்ணிலா என்ற இருவரின் நட்பை கொண்டாடும் விதமாக Vijay Tv - யில் " கண்மணி அன்புடன்" என்ற புது Serial விரைவில் வரவுள்ளது. 

by Sudhakaran Eswaran

கண்மணி, வெண்ணிலா என்ற இருவரின் நட்பை கொண்டாடும் விதமாக Vijay Tv – யில் ” கண்மணி அன்புடன்” என்ற புது Serial விரைவில் வரவுள்ளது. 

Vijay Tv – யில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரும்பாலும் TRP ரேட்டிங் அதிகம் கொண்டு இருக்க வேண்டும் என கதையை சுவாரஸ்யம் நிறைந்து நகர்த்தி செல்வார்கள். மேலும் TRP குறையும் போது ஏதேனும் ஒரு வகையில் TRP அதிகரிக்க செய்வார்கள். அல்லது தொடரை முடிக்கும்படி சேட்டு வேறு ஒரு சீரியலை கொண்டு வருவார்கள். 

சன் டிவி, விஜய் டிவி என மாறி மாறி புது சீரியலின் அப்டேட்டை தந்து வருகின்றனர். இருவரும் போட்டி போட்டு TRP ரேட்டிங்கில் முன்னும் பின்னும் இருந்து வருகிறது.  

சன் டிவியின் புது சீரிலான “மூன்று முடிச்சு” தொடரின் அப்டேட் சமீபத்தில் தந்தது. தற்போது விஜய் டிவி ” கண்மணி அன்புடன்” சீரியலின் அப்டேட்டை தந்துள்ளது. 

இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியிட்டு சீரியல் விரைவில் ஒளிபரப்பாகும் என கூறியுள்ளனர். 

ப்ரோமோவில் கண்மணி, வெண்ணிலா என இரு பெண்களின் நட்பை பற்றிய வீடியோ வெளியானது. வெண்ணிலா மழையில் நனைந்த படி கண்மணியை அழைக்க, கண்மணியும் வெண்ணிலாவுடன் சேர்ந்து மழையில் மகிழ்ச்சியாக நனைந்தார். 

கண்மணி கிராமத்து பெண் போலவும், வெண்ணிலா மார்டன் ட்ரெஸ்ஸிலும் இருப்பது கிராமத்து பெண்ணுக்கும், மார்டன் பெண்ணுக்கும் இடையேயான நட்பை கொண்டு கதை இருக்கும் என யூகிக்க முடிகிறது. 

அழகான நட்பும், அன்பான காதலும் கொண்ட கதையாக வெளிவரவிருக்கும் ” கண்மணி அன்புடன்” சீரியல். 

SaveInsta.App 449694582 7927304857390204 3913042720535889240 n

சீரியலின் ஹீரோவாக நவீன் வெற்றி இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான கண்ணே கலைமானே தொடரிலும் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் mr and mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றுள்ளார். தமிழும் சரஸ்வதியும், தேன் மொழி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடரிலும் நடித்துள்ளார். 

மதுமிதா மற்றும் துஷிதா ஆகியோர் முக்கிய ரோலில் நண்பர்களாக நடித்துள்ளனர். இதற்கான நடிகர்கள், கேரக்டர்கள் அப்டேட் அடுத்தடுத்த ப்ரோமோ வீடியோவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.