Vijay TV தொலைக்காட்சி நேற்று தங்களின் சமூக வலைத்தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஒளிபரப்பு நேரத்தில் விரைவில் மாற்றம் நிகழ உள்ளது என்று கூறப்பட்டிருந்தது, மேலும் இது குறித்த அனுமானிக்க வதந்திகளும் அதற்கு முன்னரே பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று அதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
Read More: ‘நீ நான் காதல்’ தொடரில் மீண்டும் இணையும் நடிகை Saai Gayatri
என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது?
இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் வெற்றிகரமான ‘பாக்கியலட்சுமி’ மெகா தொடர் தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகிறது, அதே போல் புதிதாக லான்ச் செய்யப்பட்ட ‘அய்யனார் துணை’ தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. Vijay TVயில் மிகவும் முக்கியமான தொடர்கள் குறிப்பாக அதில் வெற்றி பெற்ற தொடர்கள் 8-9 மணியில் தான் வெளியாகும். பாக்கியலட்சுமி தொடருக்கு கணிசமான ரசிகர் கூட்டம் இருக்கின்றன நிலையில், சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள ‘அய்யனார் துணை’ மெகா தொடர் சீரியல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வரும் நிலையில் TRP ரேட்டிங்கை மேலும் உயர்த்தும் உத்தியாக இதை கருதலாம்.
Read More: ஜீ தமிழில் புத்தம் புதிய மெகா தொடர் ‘Raman Thediya Seethai’!!
சீரியல் பெயர் | பழைய ஒளிபரப்பு நேரம் | புதிய ஒளிபரப்பு நேரம் |
பாக்கியலட்சுமி | இரவு 8.30 மணி [திங்கள் – சனிக்கிழமை] | இரவு 7 மணி [திங்கள் – வெள்ளிக்கிழமை] |
அய்யனார் துணை | இரவு 7 மணி [திங்கள் – வெள்ளிக்கிழமை] | இரவு 8.30 மணி [திங்கள் – சனிக்கிழமை] |
இந்த மாற்றத்தை வரும் 17 மார்ச் 2025 முதல் நடைமுறைப்படுத்த உள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]