விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மத்தியில், TRPயில் பலத்த வரவேற்பைப் பெற்று, சமீபத்தில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர், Siragadikka Aasai. புது முகமான வெற்றி வசந்த் நாயகனாகவும், ஏற்கனவே விஜய் டிவியில் வேலைக்காரன் சீரியலில் நடித்த கோமதி ப்ரியா நாயகியாகவும் நடித்துள்ளனனர். இந்த சீரியல் தினமும் இரவு ஒளிபரப்பாகிறது. இதை எஸ். குமரன் எழுதி, இயக்கி வருகிறார். விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த சீரியல் எபிசோடுகள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
Siragadikka Aasai சீரியல் கதை

எதிர்பாராத விதமாக இரண்டு வெவ்வேறு நம்பிக்கையை கொண்ட நபர்கள் கல்யாணம் செய்து, அதனால் இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை தான் சிறகடிக்க ஆசை. தனது குடும்ப சூழ்நிலையால் பூ கடை நடத்தி வரும் மீனா. அவர் குடும்பத்துக்காக எதையும் செய்ய நினைக்கும் பெண். முத்து ஒரு டாக்ஸி ட்ரைவர். குடிப்பழக்கம் மற்றும் முன்கோபம் உடைய நபர். தனது அம்மா மற்றும் அண்ணனிடம் அவருக்கு உள்ள தூரத்தால் மனமுடைந்து குடும்பத்தை பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லாதவர். இவர்கள் திருமணம் செய்துகொண்டு எப்படி இணைகிறார்கள், உடன் இருக்கும் பாத்திரங்களால் ஏற்படும் திருப்பம் என கதை நகரும்.
முத்துவின் தந்தை அண்ணாமலை ரயில் இன்ஜின் இயக்குபவர். மீனாவின் தந்தை ஜெயராஜ் தன் மகனுடன் நடந்த சண்டையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறார். இதில் அண்ணாமலை மீது எந்தவித தவறும் இல்லை என்றாலும், பணக்கஷ்டத்தில் இருக்கும் மீனாவின் குடும்பத்தை நேரில் சந்திக்கிறார். அங்கு மீனாவை தன் வீட்டு மருமகளாக கேட்கிறார். ஆரம்பத்தில் மீனாவும் முத்துவும் ஒப்புக்கொள்ள வில்லை என்றாலும் கல்யாணத்துக்கு பின் இருவரும் நெருங்கி பழகி தம்பியாக வாழ்க்கையை தொடங்குகின்றனர்.
முத்துவின் அண்ணன் மனோஜ் நன்றாக படித்தும் வேலை இல்லாமல் பொய் சொல்லி வீட்டை ஏமாற்றுகிறார். அவரின் மனைவி ரோஹினி ஏற்கனவே திருமணமாகி பெற்ற குழந்தையை முத்துவின் வீட்டில் மறைந்துள்ளார். முத்துவின் தம்பி ரவி இந்த குடும்பத்துக்கு பிரச்சினை தந்து வந்த குடும்பத்து பெண்ணை காதலித்து திருமணம் செய்வார். இப்படி இந்த கதையும் மற்றவை போல இருந்தாலும் நடிகர்களின் எதார்த்தமான நடிப்பும், விருவிருப்பான திரைக்கதையும் மக்களை தவறவிடாமல் பார்க்க வைக்கிறது.

கதையின் நாயகன் முத்துவின் இயல்பான நடிப்பும், நகைச்சுவை கலந்த பாத்திரம் மக்களால் பாராட்டப்பட்டு, அவருக்காகவே தொடர்ந்து பார்க்க வைக்கிறது. மீனாவின் நடிக்கும் கோமதியின் தெளிந்த நடிப்பும், அனிலா ஸ்ரீ குமாரின் வில்லத்தனமும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. பல திருப்பங்களில் சிலவற்றை மட்டுமே அவிழ்த்து பரபரப்பாக வாராவாரம் சீரியலை நகர்த்தி ஆடியன்ஸ் மனதில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளனர்.
Siragadikka Aasai சீரியல் நடிகர் நடிகைகள்
- வெற்றி வசந்த் – முத்து
- கோமதி ப்ரியா – மீனா
- ஆர். சவுந்தரராஜன் – அண்ணாமலை
- அனிலா ஸ்ரீ குமார்- விஜயா
- ஸ்ரீ தேவா- மனோஜ்
- சல்மா அருண்- கல்யாணி (எ) ரோஹினி
- ப்ரணவ் மோகன் – ரவி
- ப்ரீதா ரெட்டி- ஸ்ருதி
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]