தமிழ் சீரியல்கள் என்பது பொதுவாகவே ஒரு பெண்ணையும் அவளது குடும்பத்தையும் சார்ந்த ஒன்றாகவே இருக்கும். அவள் ஒரு சிறந்த பெண்ணாக விவரிக்கப்படுகிறாள். மேலும் கிராமப்புறங்களில் நெறிமுறைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, குடும்பச் சண்டை அல்லது குடும்ப உறவுகளின் மகிழ்ச்சிக்காக தன்னையே அர்ப்பணிப்பது போலக் காட்டப்படுகிறாள். இவ்வாறே பல காலங்களாக சீரியல்கள் எடுக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. அந்த வழியை மாற்றும் வண்ணம் தமிழ் சீரியல்களில் ஒரு புதிய கதையை அறிமுகம் செய்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றனர்.

‘Single Father’ஆக இருக்கும் தந்தை தன் பிள்ளைகளை வளர்க்கும் கதையாகத் தமிழில் மாற்றம் கொண்டு வந்தனர். ஹிந்தியிலிருந்து தமிழில் சீரியல்களைத் தழுவினாலும் தமிழ் மக்களுக்குத் தமிழ் சாரத்தோடு இந்த கதையைக் கொண்டு வந்தனர். இதன் ஆரம்பமாக அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் ஒரு நாடகமான விஜய் டிவியின் ‘தாயுமானவன்’யை கூறலாம். ஒரு தந்தை, தாயில்லா தன் ஐந்து பெண்களைப் பாசத்துடன் வளர்க்கும் கதை. இந்த தொடரில் மகேஸ்வரி, கல்யாணி, மதுமித்தா, ஜென்னிபர், ஸ்ரீ குமார் என பலர் நடித்துள்ளனர். புதுமையான கதையுடன் மக்களிடமிருந்து வரவேற்பைப் பெற்று வெற்றி நாடகமாக ஓடியது.
இதே வரிசையில் மற்றொரு காவியமாக, ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த நாடகம் தான் ‘கல்யாணம் முதல் காதல் வரை’. ப்ரியா மா என்று கூறும் பூஜாவின் குரல் இன்றும் அதன் ரசிகர்களின் காதில் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. ப்ரியா பவானி சங்கர், அமித் பார்கவ் முக்கிய வேடங்களில் நடித்தார்கள், அதே நேரத்தில் நிவாஸ்னி ஷியாம் துணை வேடத்தில் நடித்தார். தாய் செல்வம் இயக்கிய இந்த தொடருக்கு, மருது சங்கர் வசனம் எழுதியுள்ளார். மெகா ஹிட்டான இந்த சீரியல் பல ரசிகர்களால் இன்று வரை பேசப்படுகிறது.

இதே கதைக்களத்துடன் அன்று முதல் இன்று வரை பல சீரியல்கள் வந்து கொண்டே இருக்கிறது. உதாரணமாக மோதலும் காதலும், நினைத்தேன் வந்தாய், மல்லி போன்று இன்று வரையிலும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் கதையாக இருக்கிறது. ‘Single Mother’, ‘விதவை’, வயது தாண்டியும் மலரும் காதல் போன்று பல கதைக்களங்கள் வந்தாலும் ‘Single Father’ genre தான் இன்றளவும் நாடகங்கள் மத்தியில் கொடிகட்டிப் பறக்கிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]