ஜீ தமிழ் (ZEE Tamil) தொலைக்காட்சியின் பிரபலமான ‘கார்த்திகை தீபம்’ (Karthigai Deepam) தொடரில் விறுவிறுப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் இந்த வார ப்ரோமோவில், கார்த்திகை தீபம் (Karthigai Deepam) சீரியல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, கதையின் கதாநாயகன் கார்த்திக் மற்றும் ரேவதியின் திருமணத்தை நோக்கி கதைகளம் நகர்த்தப்படுகிறது.
ஏற்கெனவே, ரேவதிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடைபெற்று திருமண கொண்டாட்டத்தில் 2 வார கதை நகர்ந்த நிலையில், தற்போது இந்த திருமணத்தில் புதிய திருப்பம் ஓன்று ஏற்பட்டுள்ளது. ரேவதியின் அம்மா சாமுண்டீஸ்வரிக்கு அந்த மாப்பிள்ளையின் உண்மை முகம் தெரிய வந்ததால் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.
Read More: ஜீ தமிழில் புத்தம் புதிய மெகா தொடர் ‘Raman Thediya Seethai’!!
அந்த சூழ்நிலையில் திருமணத்தை எப்படி நடத்துவது என யோசித்துக் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி, பகையாளி குடும்பம் என நினைக்கும் தன் சொந்த அண்ணன், அண்ணி முன்னிலையில் அவமானப்படக்கூடாது என்பதற்காக, தன் வீட்டு டிரைவரான கார்த்திக்கை மணமகனாக தேர்வுசெய்கிறார்.
அனால், உண்மையிலேயே கார்த்திக் தான் சாமுண்டீஸ்வரியின் அண்ணன் மகன். இந்த திருமணத்தில், ரேவதிக்கு விருப்பம் இல்லை என்றாலும் தன் அம்மாவில் பேச்சுக்காக கார்த்திகை மணந்து கொள்ள தயாராகுகிறார். கார்த்திக்கும் தனது பாட்டியின் பேச்சை கேட்டு ரேவதியை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.
Read More: ஜீ தமிழ் (Zee Tamil) சேனலில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் சீரியல்களின் பட்டியல்!
கார்த்திக் யார் என்ற உண்மை சாமுண்டீஸ்வரிக்கு தெரியவருமா? கார்த்திக்தான் தன் மருமகன் என சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்தால் நடக்கப்போவது என்ன? கார்த்திக் மற்றும் ரேவதியின் திருமண வாழ்கை எப்படி மாறும்? என பல கேள்விகளுடனும், பரபரப்பான கதைக்களத்துடனும் கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரம் நகர்த்தப்படுகிறது.
இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் நகரும் கார்த்திகை தீபம் (Karthigai Deepam) சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் (ZEE Tamil) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]