ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரியங்கா நல்காரி – நந்தா நடித்துவந்த மெகா தொடர் ‘Nala Damayanthi’. சமையலை அடிப்படையாகக் கொண்ட வித்தியாசமான தொலைக்காட்சித் தொடரான ‘நளதமயந்தி’ வரும் மே-25 தேதியோடு முடிவுக்கு வருகிறது.
பிரியங்கா நல்காரி ஏற்கெனவே சன் டிவியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ தொடர் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப்பெற்றவர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் சன் டிவியில் ஒளிபரப்பான இத்தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்தத்தொடர் முடிந்ததும் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் ‘சீதாராமன்’ தொடரில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் பிரியங்கா. ஆனால், தொடர் ஆரம்பித்த சில மாதங்களிலேயே அவருக்கு திருமணம் நடிக்க, சீரியலைவிட்டுவிட்டு மலேஷியாவில் கணவருடன் போய் செட்டில் ஆனார்.
நன்றி, வணக்கம் சொல்லி மலேஷியா போனவர் திடீரென தன் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சீரியலில் நடிக்கப்போகிறேன் எனச்சொல்ல ஆதரவுக்கரம் தந்தது ‘ஜீ தமிழ்’. ‘நளதமயந்தி’ என்னும் புதிய சீரியலின் ஹீரோயினாக கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடித்துவந்தார். இப்போது பிரியங்கா குழந்தைப்பெற்றுக்கொள்வது என முடிவெடுத்திருப்பதால் சீரியலில் இருந்து பிரேக் எடுக்க, தமயந்தி இல்லாமல் எப்படி தொடரை எடுப்பது என சீரியலையே முடித்திருக்கிறார்கள்.
‘நளதமயந்தி’ க்ளைமேக்ஸ் ஷூட் கடந்த வாரம் முடிந்த நிலையில் வரும் மே 25-ம் தேதி கடைசி எபிசோட் ஒளிபரப்பாகும் எனத்தெரிகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]