Home Serial Zee Tamil டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்த “நினைத்தாலே இனிக்கும்” Serial.

Zee Tamil டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்த “நினைத்தாலே இனிக்கும்” Serial.

Zee Tamil டிவியில் வாரத்தில் அனைத்து நாட்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "நினைத்தாலே இனிக்கும்" Serial 1000 எபிசோடுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.   

by Sudhakaran Eswaran

Zee Tamil டிவியில் வாரத்தில் அனைத்து நாட்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “நினைத்தாலே இனிக்கும்” Serial 1000 எபிசோடுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.   

சன் டிவி, விஜய் டிவி, Zee Tamil ஆகிய சேனல்களில் பொழுதுபோக்கிற்க்காக ரசிக்கும் படியான Serial- கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு சில சீரியல்கள் 3,4 வருடங்களை கடந்து மக்களின் ஆதரவை பெற்று TRP ரேட்டிங்கில் கலக்கி வரும்.  

அந்த வகையில் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நினைத்தாலே இனிக்கும்” Serial திங்கள் முதல் ஞாயிறு வரை அனைத்து நாட்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

2021-ல் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்பட்ட இந்த Serial இன்றுவரை கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. பொம்மி என்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் இனிப்பு விற்பனை செய்ய தொடங்கியதிலிருந்து தற்போது சில எதிர்பாராத திருப்பங்கள் கொண்டும், விறுவிறுப்பான கதைக்களத்துடனும் ஒளிபரப்பாகி வருகிறது. 

இதற்கு முன்பு ஜீ தமிழ் டிவியில் செம்பருத்தி, இரட்டை ரோஜா போன்ற Serial -கள் மட்டுமே 1000 எபிசோடு வரை ஒளிபரப்பாகி சாதனை படைத்திருந்தது. இந்த சீரியல் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில், சீரியலில் நடித்தவர்களும் இந்த சாதனையை எட்ட உதவியதற்கு மக்களின் ஆதரவு தான் காரணம் என்று நன்றி தெரிவித்து வருகின்றனர். 

நினைத்தாலே இனிக்கும் serial
Source: Instagram

நாயகனாக ஆனந்த் செல்வன் சித்தார்த் கேரக்டரிலும், சுவாதி ஷர்மா நாயகியாக பொம்மி கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.  

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.