ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ‘Nenjathai Killadhe’. சினிமா நடிகரும், ஏற்கெனவே ஜீ தமிழில் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ சீரியலில் நடித்து பிரபலமானவருமான ஜெய் ஆகாஷ் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘பூவே பூச்சூடவா’ சீரியல் மூலம் பிரபலமானவரும், கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கிழக்கு வாசல்’ சீரியலில் நடித்தவருமான ரேஷ்மா நடிக்கிறார்.
‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ சீரியலுக்காக ஏற்கெனவே மூன்று ப்ரோமோக்களை ஒளிபரப்பிவிட்டது ஜீ தமிழ். இறுதிப் ப்ரோமாவாக நேற்று புதிதாக இன்னொரு ப்ரோமோ ஒளிபரப்பானது. இந்நிலையில் ஒளிபரப்பு நேரம் மற்றும் நாள் குறித்த எக்ஸ்க்ளூசிவ் செய்தி நமக்கு கிடைத்திருக்கிறது.
ஜூன் 24-ம் தேதி அதாவது அடுத்த திங்கட்கிழமை முதல் இரவு 7 மணிக்கு ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது.