Home shows ஜீ தமிழின் “மகாநடிகை” – ஆன்லைன் audition ஆரம்பம்!!

ஜீ தமிழின் “மகாநடிகை” – ஆன்லைன் audition ஆரம்பம்!!

சாமானிய பெண்ணும் நடிகை ஆகும் விதமான, ஜீ தமிழின் “மகாநடிகை” ஆன்லைன் audition ஆரம்பம் ஆகியது.

by Shanmuga Lakshmi

தமிழ் படங்களில் கதாநாயகி ஆக நடிக்க வேண்டும் என்ற கனவு எல்லா நூற்றாண்டுகளிலும், நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உண்டு. இந்த கனவை நனவாக்கும் விதமாக ஜீ தமிழ் “மகாநடிகை” என்ற ரியாலிட்டி ஷோவை தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கியமான நகரங்களில் audition வைத்து, அதில் சிறப்பாக நடிக்கும் பெண்களை தேர்வு செய்து இந்த நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்படும். இதில் சிறந்து விளங்கும் போட்டியாளர்கள் தமிழில் வெள்ளித்திரை மட்டும் அல்ல வெப் தொடர், சீரியலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் இதன் மூலம் அவர்கள் பெறுவார்கள் என்று கூறியுள்ளனர்.

போட்டியாளர்களை தேர்வு செய்ய பல இடங்களில் audition நடைபெற்று முடிந்தது. ஆடிஷனில் கலந்து கொள்ள வயது 18 முதல் 30 வரை வகுக்கப்பட்டது. காலை 10 மணிக்கு ஆரம்பிக்கபட்ட ஆடிஷன், போட்டியாளர்களின் வருகை பொறுத்து நிறைவு செய்யப்பட்டது. ஆடிஷனில் கலந்து கொள்ளும் பொது அவர்களின் போட்டோ, வயதை உறுதி செய்யும் ஏதேனும் ஒரு கோப்பு, இதற்கு மேல் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதை தெளிவு படுத்தி கொள்ள 9994704655 என்ற எண்ணிற்கு அழைத்து கேட்கலாம் என்றும் அறிவித்தனர். 

ஆடிஷன் நடந்த தேதி இடம்
ஆகஸ்ட் 5முருகையன் மெமோரியல் மாடல் மேல்நிலை பள்ளி, திருவண்ணாமலை 
ஆகஸ்ட் 7இமேஜ் ஸ்கூல் ஆப் டான்ஸ், 289, SLS டவர், கிழக்கு பாண்டிச்சேரி ரோடு, விழுப்புரம்
ஆகஸ்ட் 9வீனஸ் நர்சரி & பிரைமரி பள்ளி, தேரடி பிள்ளையார் கோவில் தெரு, சிதம்பரம் 
ஆகஸ்ட் 11சாரதா கங்காதரன் கல்லூரி, வேல்ராம் பேட்டை, புதுச்சேரி 
ஆகஸ்ட் 14தி கிரேஸ் மியூசிக் அகாடெமி, 115, RMS காலனி, நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர்
ஆகஸ்ட் 16பாரத் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, திருவப்பூர், புதுக்கோட்டை
ஆகஸ்ட் 17சபர்மதி வித்யாலயா பப்ளிக் ஸ்கூல், அரியலூர்
ஆகஸ்ட்18பிஷப் ஹெபெர் மேல்நிலை பள்ளி,தொப்பக்குளம், திருச்சிராப்பள்ளி 
ஆகஸ்ட் 27ரோஸ்மேரி ஸ்கூல் ஆப் எக்ஸ்சலன்ஸ், ஐசக் நகர், NGO காலனி, பெருமாள் புரம், திருநெல்வேலி 
ஆகஸ்ட் 28 02 டான்ஸ் ஸ்டூடியோ, டூவிபுரம் 3வது தெரு, பத்ரகாளி அம்மன் வளாகம், அண்ணா நகர் பிரதான சாலை, தூத்துக்குடி 
ஆகஸ்ட் 31தி லீடர்ஸ் அகாடெமி, சூரக்குடி ரோடு, காரைக்குடி 
செப்டம்பர் 1அம்பிகா காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் & சயின்ஸ், சாத்தமங்கலம், மதுரை 
SRM Institute of Science, பாரதி சாலை, ராமாபுரம், சென்னை 

நேரடி ஆடிஷன் நடந்து முடிந்த நிலையில், அந்த வாய்ப்பை தவற விட்ட 18 – 30 வயது பெண்களுக்கு மற்றொரு வாய்ப்பாக தற்போது ஆன்லைன் audition தொடங்கி உள்ளது. இதை குறித்த ப்ரோமோவை ஜீ தமிழ் அவர்களின் இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர். 9884324095 என்ற Whatsapp எண்ணிற்கு “MAHANADIGAI” என type செய்து  அனுப்பிய பிறகு கேட்கபடும் விபரங்களை நிரப்பி, பங்கு பெற நினைக்கும் போட்டியாளர்கள் அவர்களின் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் விதமான ‘1 நிமிட’ வீடியோவை அதே எண்ணில் அனுப்ப வேண்டும். இதற்கு அனுப்பும் கடைசி நாள் செப்டம்பர் 20 என ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. 

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.