நடக்கவுள்ள Bigg Boss 8 நிகழ்ச்சியில் இதுவரை பல விஜய் டிவி நடிகர் நடிகைகள், பிரபலங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது பலருக்கும் வித்தியாசமாக தெரிகிறது. இப்போது நடிகை Aishwarya Bhaskaran போட்டியாளராக பங்கேற்றால் இவர் இந்த சீசனில் எதிர்பார்க்காத போட்டியாக மாற அதிக வாய்ப்புள்ளது.
Aishwarya Bhaskaran தன்னுடைய இளமையான வயது முதல் சினிமாவில் நடிக்க தொடங்கியவர். 1989 முதல் தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர். தமிழில் முக்கியமாக கே பாக்யராஜுடன் இவர் நடித்த ‘ராசுக்குட்டி’ படத்தில் இவர் பிரபலமானார்.
Aishwarya Bhaskaran உடைய அம்மா பிரபல நடிகை லட்சுமி ஆவார். வழிவழியாக சினிமாவில் பணியாற்றும் குடும்பத்தில் பிறந்தவர் சிறு வயது முதல் நடிப்பதில் ஆர்வமாக இருந்து பின்னர் அவரின் தாயாரை போல பல மொழிகளில் நடித்துவருகிறார்.

இவர் 1994ல் தன்வீர் அஹ்மத் என்பவரை திருமணம் செய்துகொண்ட Aishwarya, தனது கணவரின் போதை பழக்கத்தில் தானும் ஈடுபட்டு நடிப்பதில் இருந்து விலகியிருந்தார். அவருக்கு படிப்பதில் ஆர்வம் இருந்தும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் தேடி வர, திருமணம் செய்து நடிக்க நினைத்தார். ஆனால் போதை பழக்கம், குழந்தை பிறப்பு என சில ஆண்டுகள் இடைவேளையில் இருந்தார். பின்னர் 1996ல் தனது கணவரிடம் இருந்து பிரிந்து போதை பழக்கத்தை விட்டுவிட முயற்சி எடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார்.
இந்த இடைவேளையில் தன்னுடைய படிப்பை தொடர முடிவெடுத்த Aishwarya Bhaskaran, கணினி அறிவியல் பட்டப்படிப்பை முடித்து பொறியாளராக பணியாற்றிவந்தார். அப்போது அவரின் தோழியான நடிகை ரேவதியின் அறிவுரைப்படி மீண்டும் நடிக்க தொடங்கினார், இந்த முறை தொலைக்காட்சி தொடர்களில்.
1999 முதல் தன்னுடைய திரை பயணத்தை மறுபடியும் ‘Housefull’ படத்தின் மூலம் தொடர்ந்து, அந்த ஆண்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்வரம்’ படத்திலும் நடித்தார். 2000க்கு மேல் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்தவர் 2002ல் ‘பஞ்சதந்திரம்’, ‘M. Kumaran Son of Mahalakshmi’, ‘New’ ஆகிய படங்களில் நடித்தார்.
2005ல் வெளியான ‘ஆறு’ படத்தில் நகைச்சுவையான மற்றும் தைரியமான ‘Sound சரோஜா’ பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன் பின் 2007ம் ஆண்டு ‘வேல்’, 2008ல் ‘அபியும் நானும்’ படங்களில் நடித்து சினிமா ரசிகர்களுக்கு தன்னுடைய முகத்தை பதிவிட்டுக்கொண்டிருந்தார் Aishwarya Bhaskaran. சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ‘Dada’ படத்தில் இவரை கடைசியாக பார்த்துள்ளோம்.
மலையாளம், தமிழ், தெலுங்கில் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள Aishwarya, ‘Antakshari’ போன்ற சில விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார். தற்போது ‘Multi Mommy’ என்ற Youtube சேனல் ஒன்றை நடத்திவருகிறார்.
இந்த சேனலில் பலவகையான இயற்கை குறிப்புகள்,சமையல், அழகு குறிப்புகள் பற்றி விடீயோக்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு கிட்டத்தட்ட 4 லட்ச subscribers உள்ளனர். இவரின் Bigg Boss வருகை நிச்சயம் வித்தியாசமாகவும், கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]