சினிமா ஆசையில் பலர் கிடைக்கும் பாத்திரங்களில் நடித்து, பின்னர் காலப்போக்கில் தகுந்த வாய்ப்பு கிடைக்காமல் திரை துறையை விட்டு செல்வது அறிதல்ல. அப்படி துணை நடிகராக சினிமாவில் நடிக்க தொடங்கி, பல ஆண்டுகளுக்கு பின் ஒரே கதாபாத்திரத்தால் பிரபலமானவர் தான் நடிகர் VTV கணேஷ்.
நாகர்கோவிலில் 1961ல் பிறந்த கணேஷ் ஜனார்த்தனன், சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் 2002 முதல் பல துணை கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர், தன்னுடைய முழு திறமையும் வெளிக்காட்ட பல ஆண்டுகள் எடுத்தது.
இரண்டு மூன்று நிமிடங்கள் திரையில் தோன்றி மக்களின் மனங்களில் பதியாமல் இருந்தவர் 2010ல் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என்ற படத்தின் மூலம் ‘இங்க என்ன சொல்லுது…ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா’ என ஒரே வசனத்தை பேசி உலகளவில் பிரபலமானார்.
இந்த படத்தின் பெயரை தன்னுடைய ஆடை மொழியாக மாற்றி VTV கணேஷ் என இன்றும் அறியப்படுகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், சமீபத்தில் குக் வித் கோமாளியின் விருந்தினராக குடும்ப சுற்றில் வந்த ஐஸ்வர்யா என்ற மகளும் உண்டு.
தற்போது ஒரு நகைச்சுவை நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் , தெலுங்கு மற்றும் லையாயால மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தயாரிப்பாளராக தமிழில் ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘வானம்’, ‘இங்க என்ன சொல்லுது’ மற்றும் சக்க போடு போடு ராஜா’ ஆகிய நான்கு படங்களை வெளியிட்டுள்ளார்.
Pic 1: VTV Ganesh's first appearance in Singampuli directorial #Red (2002) starring Ajith.
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 13, 2020
Pic 2-4 : VTV Ganesh in Gautham Menon's #PachaikiliMuthicharam (2006), #VettaiyaduVayaru (2007) and #VaaranamAayiram (2008)
[Credits – Bhuvi Shakti Mohan] pic.twitter.com/jqv6AQ5C70
Source : X (Christopher Kanagaraj)
சமீபத்தில் விஜய் டிவியில் உள்ள குக் வித் கோமாளி சீசன் 5 சமையல் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் VTV கணேஷும் போட்டியாகராக பங்கேற்றுள்ளார். இவர் தன்னுடைய குரலாலும், அங்கங்கே சொல்லும் Counter நகைச்சுவையால், இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான entertainer ஆக உருமாறியுளார்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் கண்டிப்பாக ஒரு வயதான பிரபலத்தை போட்டியாளராக சேர்ப்பது வழக்கமாக உள்ளது. இந்த சீசனில் VTV கணேஷ் அவர்களை content கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
VTV கணேஷ் நடித்துள்ள பிரபலமான படங்கள்
ஆண்டு | படம் |
---|---|
2010 | விண்ணை தாண்டி வருவாயா |
2011 | வானம் |
2012 | போடா போடி |
2022 | Beast |
2023 | Jailer |
2024 | The Greatest Of All Time |
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல இளைஞர்கள் மத்தியில் இவர் பங்கேற்றால் கண்டிப்பாக பல இடங்களில் நகைச்சுவையை தாண்டி பொறுமையான உரையாடல் செய்வதும், அதே சமயம் பல இடங்களில் குரல் எழுப்பி பேச வேண்டிய கட்டாயமும் இருக்கும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட முதலில் பெரிதும் சகா போட்டியாளர்களுடன் ஒன்றாம் இருந்த VTV கணேஷ், பிக் பாஸ் வீட்டில் எப்படி பழக போகிறார் என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
பெரும்பாலும் வெளிப்படையாகவும், வெகுளியாகவும் மேடைகளில் பேசி சிரிப்பலைகளை கிளப்பும் சுபாவம் கொண்ட VTV கணேஷ் ஆவர்கள், இந்த சீசன் பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய இயல்பான உனர்வுகளை கடைசி வரை கடைபிடிப்பாரா? அல்லது சக போட்டியாளர்களுடன் சேர்ந்து சண்டை சச்சரவு என விஜய் டிவிக்கு வேறு விதமான content கொடுப்பாரா என்பது நிகழ்ச்சி தொடங்கிய பின் தெரியவரும்.