விஜய் டிவியில் பிரபலமாக அடுத்தடுத்த சீசன்களாக பல லட்சம் பார்வையாலர்களை ஈர்த்துள்ள ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தற்போது 8வது சீசன் தொடங்கவுள்ளது, அதில் புது தொகுப்பாளர் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது விஜய் டிவி.
Vandhaachu Pudhu Bigg Boss 😉 #VJStheBBhost @VijaySethuOffl 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision @disneyplusHSTam #VijayTV pic.twitter.com/VZxKnYUYI2
— Vijay Television (@vijaytelevision) September 4, 2024
ஏற்கனவே இணையவாசிகள் யார் இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுக்க போகிறார்கள் என்று கணித்துள்ளனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் 8 வது சீசனில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விஜய் டிவி நிர்வாகத்துடன் கோடிக்கணக்கில் சம்பளம் பேசியதாகவும் தகவல் வெளியானது.
பிக் பாஸ் சீசன் 8 – விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?!
இதற்கு முன் 7 சீசன்களை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். தற்போது அவருக்கு பதிலாக, வார இறுதியில் தொலைக்காட்சியில் தோன்றி, பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகள், மோதல்கள், அதற்கான தகுந்த அறிவுரை என அனைத்தையும் தரப்போவது விஜய் சேதுபதி தான்.

பிக் பாஸ் சீசன் 8 -ன் முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதை புதுச்சேரியில் படப்பிடிப்பு செய்து இப்போது வெளியிட்டுள்ளனர். சமயத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் டாப் போட்டியாளர்கள் தேர்வாகும் நிலையில், அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும். இந்த பிக் பாஸ் சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் என்றும் பல கணிப்புகள் இணையத்தில் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]