Home shows பிக் பாஸ் சீசன் 8 – விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?!

பிக் பாஸ் சீசன் 8 – விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?!

பிக் பாஸ் சீசன் 8 தொகுப்பாளராக விஜய் சேதுபதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ப்ரோமோ நேற்று பாண்டிச்சேரியில் ஷூட் செய்யப்பட்டது. சன் டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கிய விஜய் சேதுபதியுடன் டீல் முடித்துவிட்டது விஜய் டிவி.

by Vinodhini Kumar

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்சித் தொகுப்பில் இருந்து கமல்ஹாசன் விலகிய நிலையில், விஜய் சேதுபதியை விலை பேசி வாங்கியிருக்கிறது விஜய் டிவி. பிக் பாஸ் சீசன் 8 தொகுப்பாளராக விஜய் சேதுபதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ப்ரோமோ நேற்று பாண்டிச்சேரியில் ஷூட் செய்யப்பட்டது. 

Vijay Sethupathi to host பிக் பாஸ் சீசன் 8

நாளை இரவு அல்லது சனிக்கிழமை விஜய் சேதிபதியை பிக் பாஸ் சீசன் 8 நிகழ்சித் தொகுப்பாளராக அறிவிக்கும் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஒருநாள் ஷூட்டிங்கிற்கு 7 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங் அதலபாதாளத்தில் விழுந்தது.

Kamal Hassan in Bigg Boss

இதனால் ஸ்பான்சர்கள் விளம்பர ரேட்டைக் குறைக்க, சேனல் நிர்வாகம் கமல்ஹாசனின் சம்பளத்தை குறைக்கச் சொல்லிகேட்டது. ஆனால், கமல்ஹாசன் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் நிகழ்ச்சியில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்டார். இதனால் தற்போது சன் டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கிய விஜய் சேதுபதியுடன் டீல் முடித்துவிட்டது விஜய் டிவி நிர்வாகம். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் கமல் ஹாசன்! உண்மையான காரணம் என்ன?

பிக்பாஸ் வார இறுதி நாட்களுக்கான எபிசோட் ஷூட்டிங் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மட்டுமே நடைபெறும். பிக்பாஸின் 100 நாட்களில் கிட்டத்தட்ட 15 முதல் 16 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான ஷூட். அதன்படி கமல்ஹாசன் 7 கோடி ரூபாய் வாங்கிவந்த நிலையில் விஜய் சேதுபதியை 3 கோடிக்கு முடித்திருக்கிறது விஜய் டிவி. இதன்படி 100 கோடியைத்தாண்டிப்போன கமல்ஹாசனின் சம்பளம் விஜய் சேதுபதியால் 50 கோடிக்குள் முடிந்திருக்கிறது!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.