Home Bigg Boss Tamil நடிகர் தீபக் Big Boss Tamil Season 8 போட்டியாளர் ஆன கதை!!!

நடிகர் தீபக் Big Boss Tamil Season 8 போட்டியாளர் ஆன கதை!!!

“தமிழும் சரஸ்வதியும்” என்ற மெகா தொடரில் கதாநாயகனாக நடித்து comeback கொடுத்தவர் நடிகர் தீபக் என்பது குறிப்பிடத்தக்கது.

by Shanmuga Lakshmi

பொதுவாக ஒரு தொலைக்காட்சியில் வாய்ப்பை பெற்று தக்கவைத்து கொள்வது குதிரை கொம்பாக இருந்து வரும் வேளையில், தனது ஆரம்ப காலத்திலேயே முன்னணி தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் பணியாற்றி உள்ளார் நடிகரும் தொகுப்பாளருமான தீபக். 1999-ல் modeling முடித்துவிட்டு, தொலைக்காட்சியில் பணியாற்ற தொடங்கியுள்ளார்.

Bigg Boss தமிழ் 8 -ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க– இங்கே கிளிக் செய்யவும் 

சின்னத்திரை பயணம்:

சின்னத்திரையில் ஒளிபரப்பான பல வெற்றி தொடர்களில் தீபக் அவர்கள் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க சீரியலின் பட்டியல் இதோ, 

பெயர் தீபக் 
Trademark மெகா தொடர்கள் அண்ணி (2001)ரெக்கை கட்டிய மனசு (2003), மனைவி (2004), மலர்கள்(2005), தென்றல்(2009), திருமதி செல்வம் (2009), தமிழும் சரஸ்வதியும் (2021) 
பணியாற்றிய தொலைக்காட்சிகள் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், DD பொதிகை, ஜெயா டிவி, ஜெமினி டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி 

சின்னத்திரையில் நடிகர் ஆக அறிமுகம் ஆகி, பின் தொகுப்பாளர் ஆக மாறிய பிறகு ஒரு நீண்ட இடைவேளை தீபக் மற்றும் நடிப்பிற்கு நேர்ந்துவிட்டது. அதை ஈடு செய்யும் விதமாக வந்த சீரியல் தான் “தமிழும் சரஸ்வதியும்” 2021-ல் விஜய் டிவியில் இந்த சீரியல் prime time-ல் ஒளிபரப்பானது. நடிகர் தீபக், மற்றும் நடிகை நக்ஷத்ரா இந்த மெகா தொடரில் முன்னணி நடிகர்கள் ஆவர். மொத்தம் 717 எபிசோடுகள் உடன் இந்த தொடர் ஏப்ரல் 2024 அன்று சுபம் அடைந்தது. இது அவருக்கு ஒரு comeback ஆக அமைந்தது.

தொலைக்காட்சி & Corporate Show தொகுப்பாளர்:

நடிகர் என்ற ஒரு முகம் மட்டும் அல்ல தொகுப்பாளர் என்ற மற்றொரு முகத்தையும் கொண்டுள்ளார் தீபக். 2006-ல் “ஜோடி நம்பர் 1” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பின்னர் அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஆனார். விஜய் டிவி பிரபலம் திவ்ய தர்ஷினியுடன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று தந்தது. விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனது மீடியா பயணத்தில் பல அனுபவங்களை பெற்றுக் கொண்டே இருந்தார்.

நிகழ்ச்சியின் பெயர் வருடம் தொலைக்காட்சி 
ஜோடி நம்பர் 1,2007விஜய் டிவி
Boys vs Girls 2009விஜய் டிவி 
Home sweet Home 2011-2012விஜய் டிவி 
சன் குடும்பம் விருதுகள் 2012,2013,2014சன் டிவி 
Super Challenge, 7UP Upstarters,Mr & Mrs கில்லாடிஸ்2015-2016சன் டிவி 
டான்ஸ் ஜோடி டான்ஸ், SAREGAMAPA lil champs,ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்,ஜீ சினி awards தமிழ் 2017-2020ஜீ தமிழ் 
கலாட்டா நக்ஷத்ரா விருதுகள் 2022கலைஞர் டிவி 

இதை தவிர்த்து பல “Corporate Show”-களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

கோலிவுட் கதாநாயகன்:

வெள்ளித்திரையில் கதாநாயகனாக தன்னை காண வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகர்களுக்கும் உண்டு. அந்த ஆசை நடிகர் தீபக்கிற்கிக்கும் வர பல திரைப்படங்களில் துணை நடிகராக, சிறு சிறு வேடங்களில் நடித்தார் அதில் “காதல் வைரஸ், இளசு புதுசு ரவுசு, தக திமி தா, முன்தினம் பார்த்தேனே” குறிப்பிடத்தக்கவை. கதாநாயகனாக 2015-ல் அறிமுகம் ஆனார்.

படம் இவனுக்கு தண்ணில கண்டம் 
வெளியான வருடம் 2015
இயக்குனர் S.N.சக்திவேல் 
நடிகர்கள் பெயர் தீபக், நேஹா ரத்னாகரன், மொட்டை ராஜேந்திரன், சென்ட்ராயன்,மனோபாலா,இளங்கோ குமரவேல் 

அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை என்ற வருத்தம் பல மேடைகளில் அவர் கூறியதுண்டு. 20 வருடங்களுக்கு மேல் மீடியா, சின்னத்திரை, பெரியத்திரை அனுபவங்களை கொண்டுள்ள தீபக் தனது வெள்ளித்திரை கனவை மேலும் வலுவாக்க இந்த Big Boss Tamil Season 8 போட்டியாளர் வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். தற்போது உள்ள காலத்தில் அனுபவத்தையும் தாண்டி மக்கள் மனதில் யார் ஆழமான இடத்தை பிடிக்கிறார் என்பதே மிகவும் முக்கியமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் எந்த மாதிரியான நபராக அவர் இருப்பார் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.