Home Bigg Boss Tamil Bigg Boss 8 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ‘அயன்’ நடிகர் Jagan!

Bigg Boss 8 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ‘அயன்’ நடிகர் Jagan!

விஜய் டிவியில் வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள ரியாலிட்டி நிகழ்ச்சியான Bigg Boss 8 தமிழில் 'அயன்', 'இந்தியன் 2' படங்களில் நடித்த நடிகர் Jagan பங்கேற்கவுள்ளார்.

by Vinodhini Kumar

தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராகவும் நகைச்சுவையான பாத்திரங்களில் நடித்தவர் நடிகர் Jagan. இவர் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பின்னர், திரைப்பட விமர்சகராக பிரபலமானார். பல ஆண்டுகள் விஜய் டிவியில் பணியாற்றிய இவர் பின்னர் பல முன்னணி சேனல்களில் பணியாற்றி வருகிறார்.

Jagan at Indian 2 show

2007 முதல் விஜய் டிவியில் பணியாற்றி வரும் ஜெகன், 2008ல் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ நிகழ்சியால் பிரபலமானார். இது தமிழ் படங்களை விமர்சிக்கும் நிகழ்ச்சியாக இருந்தது. சற்றே கடுமையான விமர்சனம் தருவதால் இந்த நிகழ்ச்சி சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. 

பின்னர் ‘Connexion’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் ஒவ்வொரு சுற்றையும் அவர் கூச்சலிட்டு அறிமுகம் செய்யும் விதம் மிக பிரபலமாக பேசப்பட்டது. முக்கியமாக ‘ஜவ்வு மிட்டாய்’ என்ற வாசகம் இன்றும் பலரால் மறக்கமுடியாத ஒன்று. 2013 முதல் 2017 வரை இந்த நிகழ்ச்சியையும் இதன் அடுத்த சீசனான ‘நம்ம ஊரு Connexion’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். 

Bigg Boss தமிழ் சீசன் – 8 போட்டியாளர்களின் பெயர்கள்!!

பின்னர் சன் டிவி, கலைஞர் டிவி மற்றும் Zee தமிழ் சேனல்களில் விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதோடு பல விருது விழாக்களையும் பல இடங்களில் சிறப்பாக தொகுத்து வழங்கும் ஆற்றல் பெற்றவர். இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலி வான்மதியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கவின் மற்றும் வியாசா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் திரைத்துறையில் 2005 முதலே பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்தாலும், 2009ல் இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ‘அயன்’ படத்தில் ‘சிட்டி பாபு’ என்ற பாத்திரத்தில் நடிகர் சூரியாவின் நண்பராக படம் முழுவதும் பயணித்தார். இந்த பாத்திரத்துக்காக இன்றளவும் பாராட்டப்படுகிறார். 

பின்னர் நடிகர் கார்த்தி உடன் ‘பையா’ படத்தில் ‘பூச்சி’ என்ற சிஸ்ரியா தோற்றத்திலும், 2011 மீண்டும் இயக்குனர் கே வி ஆனந்த் உடன் ‘கோ’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், கதையின் திருப்பமாக இடத்தில் நடித்திருப்பார். 

அடித்ததாக குறிப்பிடத்தக்க பாத்திரமாக நடிகர் Jagan 2013ல் தனுஷ், பார்வதி நடிப்பில் உருவான ‘மரியான்’ படத்தில் நடித்திருந்தார். இதே வருடம் ‘வாத்திக்குச்சி’ என்ற திரில்லர் படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார் ஜெகன். 

Actor Jagan

நடிகர் கமல் ஹாசன் உடன் ‘தூங்காவனம்’, விஷால் உடன் ‘நான் சிகப்பு மனிதன்’, ‘விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்தார். இவர் நடித்த பல படங்களில் இவரின் இயற்பெயரான ‘Jagan’ தான் பாத்திரத்துக்கு வைக்கப்பட்டதால் மக்கள் எளிதில் இவரை மனதில் வைத்துக்கொள்வார்கள். 

விண்ணைத்தாண்டி Bigg Boss Tamil Season 8 -ல் போட்டியிட வருகிறார் VTV கணேஷ்! 

சமீபத்தில் 2022ம் ஆண்டு நடிகர் மாதவன் இயக்கி நடித்த ‘Rocketry The Nambi Effect’ படத்திலும், ‘2024ல் இந்தியன் 2’ படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இவர் பல நேர்காணல்களில் தன்னுடைய திரை பயணம் பற்றியும் எப்படி பல வாய்ப்புகள் தனக்கு கிடைக்காமல் இருக்கிறது என வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான எந்த படமும் அவருக்கு சாதகமாக அமையாததால் இவர் Bigg Boss 8 நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளது. 

வழக்கமாக நக்கலான நகைச்சுவை உணர்வுடன் நிகழ்ச்சிகளில் காணப்படும் Jagan, Bigg Boss நிகழ்ச்சியில் கண்டிப்பாக ஒரு நல்ல போட்டியாக தாக்குபிடிப்பார் என்ற கணிப்பு உள்ளது. கடந்த சில சீசன்களில் கூட Sandy மாஸ்டர், நடிகர் ராஜு ஆகியோர் தங்களுடைய நகைச்சுவையால் பல சிக்கல்களில் இருந்து தப்பியுள்ளார். 

வருகிற Bigg Boss சீசனில் நடிகர் Jagan பங்கேற்றால் அவருடைய தொலைக்காட்சி அனுபவம் மற்றும் நகைச்சுவை திறன் ஆகியவை அவருக்கு பெரிய பலமாக அமைந்து நீண்ட நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடிக்க உதவும். மேலும் பல இயக்குனர்களுக்கு இவருடைய திறமையும் ஆற்றலும் தெரியவந்து பட வாய்ப்புகள் கிடைக்கவும் கூடும். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.