தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் ரஞ்சித். நடிகர் ஆக அறிமுகமாகி பின்னர் இயக்குனர் & அரசியல்வாதி ஆக தன்னை மாற்றிக் கொண்டார். தற்போது Big Boss Tamil season 8-ல் ஒரு சீனியர் போட்டியாளராக நுழைந்துள்ளார்.
Bigg Boss தமிழ் 8 -ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க– இங்கே கிளிக் செய்யவும்
நடிகனாக தொடங்கிய பயணம்:
1972-ல் கோயம்பத்தூரில் பிறந்த நடிகர் ரஞ்சித் தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு நடிப்பிற்கான படிப்பையும் முடித்துவிட்டு 1993-ல் இயக்குனர் K.S.ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான “பொன் விலங்கு” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அதற்கு அடுத்த வருடம் “சிந்து நதி பூ” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். 2004-ல் “நட்டுராஜவு” என்ற தனது முதல் மலையாள படத்திலும், 1999-ல் “சினேகம் கோசம்” என்ற தெலுங்கு படத்திலும் பணியாற்றியுள்ளார்.
விருது:
1998-ல் வெளியான “மறுமலர்ச்சி” என்ற படத்தில் தனது சிறப்பான வில்லத்தனம் வெளிக்காட்டும் நடிப்பை வெளிக்காட்டி அந்த ஆண்டு சிறந்த வில்லனுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் மம்முட்டி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர், அரசியல் & சர்ச்சை:
தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகர்கள் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்வது என்பது வழக்கமான ஒன்று. அதே போல் நடிகர் ரஞ்சித் அரசியல் வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். இயக்குனர் ஆக 2024-ல் வெளியான “கவுண்டம்பாளையம்” என்ற படத்தில் அறிமுகமாகி, அந்த படத்தின் ப்ரோமோஷன் போது சாதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பலரது எதிர்ப்பை பெற்றார்.
BB தமிழ் சீசன் 8 வீட்டில் நுழைந்த ‘கோமாளி’ பட நடிகை மற்றும் social media influencer பற்றி தெரியுமா?
அவர் நடித்த சீரியல்கள்:
விஜய் டிவியில் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘செந்தூர பூவே’ நாடகத்தில் நடித்து சின்னத்திரைக்கு நுழைந்தார். அதன் பிறகு தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் “பழனிச்சாமி” என்ற முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடிகனாக நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் ரஞ்சித், ஒரு புது முயற்சியாக தனது வாழ்வில் இந்த Big Boss Tamil season 8 இருக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.