VJ. விஷால் கோயம்புத்தூரில் பிப்ரவரி 13, 1996 -ல் பிறந்தார். உயர் படிப்பை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் பிரிவில் (BE) பட்டம் பெற்றார். படிப்பை முடித்துவிட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த விஷால் திரைத்துறையின் மீது இருந்த ஆர்வத்தால் VJ (வீடியோ ஜாக்கி) – வாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வந்தார்.
Bigg Boss தமிழ் 8 -ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க– இங்கே கிளிக் செய்யவும்
தொலைக்காட்சி சேனல்களில் வாய்ப்பு தேட சென்ற விஷால் வெளிச்சம் டிவியில் “அங்காளி பங்கலி” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் அதே டிவியில் “கால் பண்ணா காசு” நிகழ்ச்சியையும், வேந்தர் டிவியில் ஒளிபரப்பான “துள்ளுவதோ இளமை” நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.

விஷால் 2018 -ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் “கல்யாணம் கல்யாணம்” என்ற சீரியலில் மதன் கேரக்டரில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார்.
Bigg Boss தமிழ் சீசன் – 8 போட்டியாளர்களின் பெயர்கள்!! மற்றும் புகைப்படம்.
பின்னர் விஜய் டிவியின் “ஜோடி ஃபன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால் “அரண்மனை கிளி” சீரியலில் ஆகாஷ் என்ற கேரக்டரிலும் நடித்துள்ளார். மேலும் “இது நாள் வரை” குறும்படத்திலும் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார்.
ஜாலியான கேரக்டர், காமெடி, பேச்சு, நடிப்பு என பன்முகத்தன்மை கொண்டு தனது திறமையை வெளிக்காட்ட காத்திருந்த விஷால் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் உதவி இயக்குனராக இருந்து வந்தார்.
விஷால் தன்னை அடையாளப்படுத்திய நிகழ்ச்சி:
வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்த விஷால் விஜய் டிவியில் பெரிய அளவில் ரசிக்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியலில் எழிலன் கேரக்டரில் நடித்து தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார் என்றே கூறலாம்.
தனது நடிப்பால் கவனம் பெற்று தொலைக்காட்சி துறையில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார். பின்னர் விஜய் டிவியில் ஸ்டார் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 4 -ல் குக்காகவும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். மேலும் ரெடி ஸ்டெடி போ என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார்.
Bigg Boss 8 ல் போட்டியாளராக இணைகிறார் ‘செல்லம்மா’ சீரியல் நடிகர் Arnav!
மக்களிடம் ஓரளவு பரீட்சயமான விஷால் திடீரென்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார். இது குறித்து விஷால் கூறும் போது நான் சினிமா துறையில் எனது பயணத்தை தொடரவேண்டும் என்ற ஆசையோடு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறினேன்.
எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் கனவு. அதனால் சினிமாவில் முயற்சி செய்யும்போது பாக்கியலட்சுமி சீரியலலில் எழில் கேரக்டர் போலவே எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் திரையில் வாய்ப்புக்காக மட்டுமே எழில் போன்ற கேரக்டரில் நடித்து வருகிறேன். உண்மையில் எழில் கேரக்டர் போல என்னுடைய கேரக்டர் கிடையாது. எனக்கான கேரக்டர் என்பது எது என முடிவு செய்து அதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.
பெயர் | VJ. விஷால் |
பிறப்பு | பிப்ரவரி 13, 1996 – கோயம்புத்தூர் |
பிரபலமானது | குக் வித் கோமாளி சீசன் 4 |
சீரியல்கள் | கல்யாணம் கல்யாணம், அரண்மனை கிளி, பாக்கியலட்சுமி சீரியல், |
கிட்டத்தட்ட 10 வருடங்களாக சரியான வாய்ப்பை தேடி வரும் விஷால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாக்கத்தை ஏற்படுத்துவரா என பார்க்கலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]