சீரியல் நடிகையும் மாடலுமான அன்ஷிதா மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி என இரண்டிலும் தனக்கான இடத்தை உருவாக்கி வரும் நபர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
ஆகஸ்ட் 28, 1997 -ல் கேரளாவின் கொல்லம் பகுதியில் பிறந்தார். Anshitha anji என்ற யூடியூப் சேனலில் அன்றாட வாழ்க்கை முறையை பதிவிட்டு வரும் அன்ஷிதா 200k பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.
Bigg Boss தமிழ் 8 -ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க– இங்கே கிளிக் செய்யவும்
தனது படிப்பை SN கல்லூரி கேரளாவில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார். தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் தொலைக்காட்சிகளில் தனக்கென ஒரு அடையாளத்தை நிலைநிறுத்த ஆசைப்படுகிறார்.

அன்ஷிதா பொழுதுபோக்குத் துறையான சினிமாவில் வாய்ப்பு தேட முயன்றபோது, ஆரம்பத்தில் மாடலிங் செய்ய தொடங்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்கு முன்பு உள்ளூர் ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் தன்னை அடையாளபடுத்தினார்.
2019 -ல் ஜீ கேரளாம் என்ற மலையாள தொலைக்காட்சியில் “கபானி” என்ற சீரியலில் ரம்பா என்ற கேரக்டரில் நடித்தார். அதில் அவரது நடிப்பு கவனிக்கும் வகையில் இருந்ததால் பாராட்டப்பட்டது.
மலையாள தொலைக்காட்சியில் 2021 -ஆம் ஆண்டு முதல் நடித்து வந்த அன்ஷிதா 2022 -ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் செல்லம்மா கேரக்டரில் நடித்து பலரது கவனம் பெற்றார்.
அதனை தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5 -ல் கோமாளியாக கலந்துகொண்டு காமெடியிலும் கலக்கினார். தனக்கான இடத்தை உருவாக்கிவந்த நிலையிலும் சமீபத்தில் செல்லம்மா சீரியலில் ஒன்றாக நடித்துவந்த டிவி சீரியல் நடிகரான அர்னவ் உடனான சர்ச்சையில் சிக்கி பெரிய அளவில் பேசப்பட்டு வந்தார். அவருடனான காதலில் இருப்பதாக அர்னவ் மனைவி இருவர் மீதும் குற்றம் சாட்டினார்.
சர்சைகள் முடித்த நிலையில் தற்போது சக போட்டியாளராக அர்னவ் Big Boss வீட்டிற்க்கு வந்த நிலையில் இருவரும் பெரிய அளவில் கன்டென்ட் தருவார்கள் என பலரும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அன்ஷிதா இன்ஸ்டாகிராமில் 480k பாலோவர்ஸ் கொண்டு ரீலிஸ், புகைப்படம் வெளிட்டு வருகிறார்.
பெயர் | அன்ஷிதா |
பிறப்பு, ஊர் | ஆகஸ்ட் 28, 1997 , கேரளா |
புகழ்பெற்றது | செல்லம்மா சீரியல், குக் வித் கோமாளி சீசன் 5 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]