‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தொகுப்பாளராக கலந்துகொள்ளும் Bigg Boss 8 நிகழ்ச்சி, வரும் அக்டோபர் 6 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் அந்த 16 போட்டியாளர்கள் கணிப்பு, தினசரி இணையத்தில் பேசப்படுகிறது.
Bigg Boss தமிழ் 8 -ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க– இங்கே கிளிக் செய்யவும்
தொலைக்காட்சி சீரியல்களில் நடிகராக வலம் வரும் நடிகர் Arnav, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியில் 26 ஏப்ரல், 1989ல் பிறந்த அம்ஜத் கான், 2014 முதல் தமிழ் சீரியல்களில் Arnav என்ற பெயரால் நடிக்க தொடங்கினார்.

சன் டிவியில் ‘சக்தி’ சீரியலில் வில்லனாக நடித்த Arnav, அடுத்ததாக 2015 -2017ல் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ சீரியலில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். பின்னர் Zee தமிழ் சேனலில் வாய்ப்பு கிடைத்து, ‘ப்ரியசகி’ என்ற சீரியலில் நடித்தார்.
Bigg Boss சீசன் 8 தொடங்குவதற்கு முன் நடந்துள்ள விபரீதம்! – வடமாநில தொழிலாளி படுகாயம்!
2018ம் ஆண்டு மீண்டும் சன் டிவியில் நடிக்க தொடர்ந்த அர்னவ், ‘கல்யாண பரிசு 2’ தொடரில் நடித்தார். 2022 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ சீரியலில் கதாநாயகனாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சன் டிவியில் ‘கேளடி கண்மணி’ தொடரில் நடித்தபோது நடிகர் அர்னவ் மற்றும் நடிகை Divya Shridhar காதலித்தனர். இருவரும் 5 ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கிடையே 2022ல் மணமுறிவு ஏற்பட்டு நடிகர் அர்னவ் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நடிகர் அர்னவ் அவரின் மனைவியை தாக்கியதாகவும், இவர்களின் திருமணத்திற்கு பின்னர் வேறு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாக Divya Shridhar வழக்கு பதிந்த நிலையில், இவர்களின் வழக்கு விசாரிக்கப்பட்டது. காவல் துறையினரால் arrest செய்யப்பட்ட நடிகர் அர்னவ், பின்னர் ஜாமீன் கிடைத்து விடிவிக்கப்பட்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த்தயடுத்து, இருவரும் தங்கள்பக்கம் உள்ள கருத்துக்களை பல நேர்காணல்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
தற்போது Bigg Boss 8 நிகழியில் போட்டியாளராக இணையவுள்ள Arnav, அடுத்தக்கட்டமாக சினிமா வாய்ப்பை குறிவைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 35 வயதாகும் அர்னவ், ஒரு நல்ல போட்டியாகவும் மற்ற போட்டியாளர்களுக்கு அமைவார் என்ற கணிப்பும் உள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]