விஜய் டிவியில் பிரபல நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் Bigg Boss 8 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி, பாதி போட்டியாளர்கள் வீட்டிற்கு செல்வதற்குள் ஒரு பெரிய task கொடுக்கப்பட்டது. 18 போட்டியாளர்களும் வீட்டினுள் தஞ்சம் அடைந்து அடுத்த 106 நாட்களுக்கு தாக்கு பிடிக்க திட்டம் திட்டும் பொது இதுவரை காணாத ஒரு திருப்பம் என அதிரடியாக தொடங்கியுள்ளது சீசன் 8.
Bigg Boss தமிழ் 8ல் இதுவரை
அறிமுக நாளில் Bigg Boss வீட்டை இரண்டாக பிரித்து, இந்த சீசனில் ஆண்கள் vs பெண்கள் என்ற வழியை வகுத்து, அதில் ஒரு task கொடுத்தனர். இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டில் ஒரு பக்கம் பெண்களும், மறுபக்கம் ஆண்களும் வாசிக்க வேண்டும் என்பதும், அதில் குறைந்த வசதிகளை உடைய பக்கத்தில் வசிக்கும் ஆண்கள் முன்வைக்கும் ஒரு நிபந்தனைக்கு ஒத்துப்போக வேண்டும்.
அப்படி ஆண்கள் 8 பெரும் சேர்ந்து அவர்கள் முடிவெடுக்கும் ஒரு வாரத்தில் எந்த ஆண்களையும் பெண்கள் வெளியேற்ற nominate செய்யக்கூடாது என்பது தான் ஆண்கள் முன்வைத்த நிபந்தனை. இதற்கு 6 பெண்கள் ஒப்புக்கொண்டதையடுத்தது, கடைசியாக வந்த இரண்டு பெண் போட்டியாளர்கள் Jacquline மற்றும் Tharshika இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதோடு அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளரை வெளியேற்ற nominate செய்யவேண்டும் என்பதோடு அறிமுக எபிசொட் முடிந்தது.
Bigg Boss தமிழ் 8 நாள் 1 -ல் நடந்தவை
மேலும் அதிரடியான 24 மணி நேர வேயேற்றம் ஒன்று நடந்தேறியது. பிக் பாஸ் வீட்டில் நுழைந்த 24 மணி நேரத்தில் சகா போட்டியாளர் ஒருவரை தக்க காரணத்துடன் வெளியேற்றவேண்டும் என்பது அடுத்த திருப்பம். அப்படி வீட்டிலுள்ள அனைவரும் open nomination செய்து வெளியேற்றிய போட்டியாளர் ‘மகாராஜா’ பட இளம் நடிகை Sachana Namidass.
முதல் நாள் காலை 24 மணி நேரத்தில் எப்படி தெரியாத ஒருவரை வெளியேற்ற முடியும் என விவாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் வசிக்கும் அனைவரும் அமர்ந்து, ‘ஏன் என்னை 24 மனை நேரத்தில் வெளியேற்ற கூடாது?’ என காரணங்களை குறி பிற போட்டியாளர்களை தங்களை nominate செய்வதை தடுக்க வேண்டும். அப்படி அனைவரும் சில காரணங்கள் கொடுக்க, Sachana Namidass மட்டும் ‘இந்த வீட்டில் நுழைந்த முதல் மூன்று பெண் போட்டியாளர்களின் நனையும் ஒருவர், நான் ஆண்கள் முன்வைத்த நிபந்தனைக்கு ஒத்துப்போயிருக்க கூடாது. அப்படி யாராவது 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டுமானால், அது நானாக இருக்கட்டும்’ என கூறினார்.
பின்னர் நடந்த open nominationல் அனைவரும் ஒவ்வொரு போட்டியாளரை வெளியேற்ற பரிந்துரைத்தனர். அதில் தயாரிப்பாளர் Ravindar Chandrasekaran முதல் முறையாக Sachana -வின் பெயரை கூறினார். காரணமாக அவரே 24 மணி நேரத்தில் இந்த போட்டியின் வலிமை புரியாமல், கிடைத்த வாய்ப்பை இப்படி எளிதில் விட்டுக்கொடுப்பது சரியில்லை என கூறினார். அவர் போட்டுக்கொடுத்த பாதையில் மேலும் பலர் Sachana வை nominate செய்தனர்.
ஒரு கட்டத்தில் Jacquline மற்றும் Sachana இருவரும் இந்த வீட்டில் இருந்து வெளியேற சமமான nominations பெற்றிருந்த நிலையில், Jacquline தன்னுடைய பரிந்துரைக்கு Sachana உடைய பெயரை nominate செய்தார். இதனால் Sachana 24 மனை நேரத்திலேயே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
Unfair @EndemolShineIND @Banijayasia @vijaytelevision
— Imadh (@MSimath) October 7, 2024
Have a good life #Sachana
Will look forward you as a wildcard🥰#biggbosstamil #biggbosstamil8 pic.twitter.com/1P3u9e45qv
இந்த வெளியேற்றம் Bigg Boss 8 ரசிகர்களால் ஏற்கமுடியவில்லை. இணையத்தில் இந்த eviction -க்கு பிறகு #UnfairEviction என்ற ஹாஷ்டாக் பரவி, இவரின் வாய்ப்பு பறிக்கப்பட்டதாகவும், எப்படி ஒரு நபரை வெறும் 24 மணி நேரத்தில் வெளியேற்றலாம் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இந்த Bigg Boss சீசனில் நடிகர் கமல் ஹாசன் இல்லாததும், பல போட்டியாளர்கள் விஜய் டிவியை சேர்ந்தவர்கள் என்று விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, கவனம் ஈர்க்க இப்படி ஏதாவது அதிரடியாக செய்வது மக்களால் வரவேற்கப்படவில்லை.
முதல் Task : நாற்காலி! யார் காலி?
முதல் வாரத்தின் தொடக்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டு துண்டாக இருக்க, இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடந்தது. இதில் தேர்வக்கப்போவது தலைவரா? தலைவியா? என தீர்மானிக்க கொடுக்கப்பட்ட டாஸ்க் தான் நாற்காலி! யார் காலி.
சிறுவர்கள் விளையாடும் இசை நாற்காலி (Musical Chair) போட்டியை சற்றே மாற்றி நடுவே ஒரு கொடு போட்டு, ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் மறுபக்கம் உட்கார்ந்து, ஒவ்வொரு முறை பிக் பாஸ் ஒளி எழுப்பும்போதும், எதிரே உள்ள நாற்காலிகளில் ஒன்றில் உட்கார வேண்டும். அப்படி கடைசியில் ஒரு ஆன் ஒரு பெண் இருக்கும் நிலையில், யார் முதலில் அந்த நாற்காலியில் உட்காருகிறாரோ அவர் தான் captain.
இந்த போட்டியில் முதல் சுற்றின் ஆரம்பத்திலேயே போட்டியாளர் Ravindar Chandrasekaran தன்னுடைய உடல் பருமன் காரணமாக விளக்கினார். அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் Tharshika வெற்றிபெற்று பெண்கள் அணிக்கு பலத்தையும் இந்த வார தலைவியாக பொறுப்பையும் வென்றார்.
இந்த வார eviction பரிந்துரை Confession Room ல் நடந்தது. அதில் கேப்டன் Tharshikaவை தவிர மற்ற போட்டியாளர்களின் இருவரை தக்க காரணத்துடன் நோமின்டே செய்ய வேண்டும். அதில் முதல் நாள் வீட்டு பிரிவினைக்கு உடன்படாத Jacquline, மற்றும் மனதளவில் Bigg Boss நிகழ்ச்சியை பற்றி அதிகம் புரிதலுடன் இருக்கும் Ravindar Chandrasekaran இருவருக்கும் அதிக nominations கிடைத்தது.
ஆண்கள் மற்றும் பெண்களின் விதிமுறைகள்
பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டதால், பல அடிப்படையான இடங்களுக்கு போட்டியாளர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சமையலறை, confession room, Sofa area என இந்த இடங்களில் சில ஆண்கள் தேர்ந்தெடுத்த பக்கத்திலும் பெண்கள் தேர்ந்தெடுத்த பக்கத்திலும் இருக்கிறது. இதில் இருவரும் எளிதாக புழங்க, இரண்டு குழுவும் தனியாக சில விதிமுறைகளை முன்வைக்க வேண்டும். அந்த விதிமுறைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் confession ரூமில் பிக் பாஸிடம் குறை, ஏற்புடைய விதிமுறைகள் நடைமுறையில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அப்படி ஆண்களும் பெண்களும் அவர்களின் விதிமுறைகளை முடிவெடுத்தனர். ஓங்கோல் தரப்பில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் Sachana இந்த விதிமுறைகளை கூறினார். அதில் பெண்கள் பக்கம் உள்ள சமையலறை, confession ரூம் ஆகிய பகுதிகளை ஆண்கள் புழங்க வேண்டுமானால், முதலில் அவர்கள் சொன்ன ஒரு வாரத்திற்கு nominate செய்யக்கூடாது என்ற நிபந்தனையை திரும்பப்பெற வேண்டும் என்றும், இரணடாவதாக confession அறைக்கு செல்ல வேண்டுமானால் அதற்கு பெண்களுக்கு ஒரு வாரத்திற்கு உணவு மற்றும் இதர அடிப்படை தேவைகள் சரியாக வழங்க வேண்டும் என்றும் முன்வைத்தனர்.
ஆண்கள் தரப்பில் சமையலறை புழக்கம் இல்லாததால் நேரத்திற்கு உணவு வரவேண்டும், மேலும் இவர்கள் பக்கம் இருக்கும் வீட்டை உபயோகிக்க வேண்டுமானால் அதற்கு அவர்கள் சொல்லும் ஒரு task ஐ செய்யவேண்டும் என்றமாதிரியான நுணுக்கமான விதிமுறைகள் கூறப்பட்டது. இதை போட்டியாளர் Muthu Kumaran முன்னின்று பிக் பாஸிடம் கூறினார்.
பெண்கள் தரப்பில் வைக்கப்பட்ட Confession room புழங்கும் விதிமுறையை பிக் பாஸ் அலைக்கும் பொது எந்த போட்டியாளராக இருந்தாலும் எவ்வித நிபந்தனையுமின்றி வர வேண்டும் என மறுக்கப்பட்டது. போட்டியாளர்களாக Bigg Boss இடம் பேச confession அறைக்கு செல்ல பெண்கள் கூறும் ஒரு task ஐ செய்யலாம் என்றும் முடிவாகியது.
முதல் வார Eviction பரிந்துரைகள்
போட்டியாளர் | எலிமினேஷன் வாக்குகள் |
---|---|
Ravindar Chandrasekaran | 6 வாக்குகள் |
Jacquline | 5 வாக்குகள் |
Soundariya Nanjundan | 4 வாக்குகள் |
Ranjith | 4 வாக்குகள் |
Muthu Kumaran | 3 வாக்குகள் |
Arun Prasath | 3 வாக்குகள் |
Bigg Boss 8 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களுக்குள் இந்த வீட்டில் ஒரு வெளியேற்றம், பல சண்டைகள், சந்தேகங்கள் வாக்குவாதங்கள் என ஆரம்பமே அதிரடியாக தொடங்கியுள்ளது. முதல் வாரத்தில் மக்களால் காப்பாற்றப்படும் போட்டியாளர் யார்? கைவிடப்படும் போட்டியாளர் யார்? இந்த கேள்விக்கான பதில் வாரஇறுதியில் இல்லை, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் போட்டியாளர்களின் நடைமுறையில் தெரிந்துவிடும்.