விஜய் டிவியில் புதிதாக தொடங்கவுள்ள Bigg Boss சீசனுக்காக சென்னையை அடுத்த செம்பரபாகத்தில் set அமைக்கும் பணியின் போது , வடமாநில தொழிலாளர் ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனும் தொடங்கும் முன் அதில் போட்டியிடும் போட்டியாளர்களை பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் ரசிகர்கள், அதே அளவு இந்த சீசனில் Bigg Boss வீடு எப்படி இருக்கிறது, என்னமாதிரியான புதுமையான set போடப்பட்டுள்ளது என தெரிந்துகொள்ள விரும்புவார்கள்.
தற்போது விஜய் டிவியில் அடுத்த Bigg Boss சீசன் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இந்த சீஸனின் முதல் எபிசோட் வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என Promo வெளியானது. இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டை புதுப்பிக்க கட்டுமான பணிகள் நடந்துவருகிறது.
பிக்பாஸ் செட் அமைக்கும் பணியில் விபத்து!#Chennai #EVPFilmCity #FilmCity #BiggBoss #BiggBossTamil #VijaySethupathi #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/RuqeCPqHLz
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) September 25, 2024
இன்று செம்பரம்பாக்கத்தில் உள்ள EVP Film City -யில் செட் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்துவந்த கட்டிட வேலையின் போது, வடமாநில தொழிலாளி ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் அவரின் கை மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
விரைந்து அவரை மீட்டு, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் உத்திர பிரதேசத்தை சேர்ந்த முகம்மது ஷாகின் கான் என்றும், ஏறத்தாழ 40 வயது ஊழியர் படுகாயம் அடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த செய்தியை News Tamil 24×7 செய்தி சேனல் வெளியிட்டுள்ளது.
Bigg Boss Tamil சீசன் 8 -ல் போட்டியாளராக பங்கேற்கவுள்ளார் Shaalin Zoya!
செம்பரம்பாக்கத்தில் உள்ள இந்த EVP Film City -யில், பெரும்பாலான விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களின் படப்பிடிப்பு நடப்பது மட்டுமல்லாமல், திரைப்படங்களின் செட்களும் இங்கு உருவாக்கி படப்பிடிப்பு நடத்தப்படுவது வழக்கம். இதில் பல முறை இப்படியான விபத்துக்கள் நடைபெறுவதாகவும், ஆனால் தனியார் சேனல் என்பதால் பெரிய விபத்துக்கள் மட்டுமே வெளியில் தெரியவருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]